தமிழில் தேட.....

Showing posts with label தாலாட்டுப்பாடவா. Show all posts
Showing posts with label தாலாட்டுப்பாடவா. Show all posts

Wednesday, June 19, 2019

வராது வந்த நாயகன் - தாலாட்டுப்பாடவா பாடல் வரிகள்



படம்: தாலாட்டுப்பாடவா
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
முதா கராத்த மோதகம்
சதாவி முக்தி சாதகம்
கலா தராவ தம்சகம்
விலாசி லோக ரக்ஷகம்
அநாய கைக நாயகம்
விநாசி தேப்ர தைத்யகம்

பெண்:
நதா சுபாஷு நாஷகம்
நமாமி தம் விநாயகம்
முதா கராத்த மோதகம்
சதாவி முக்தி சாதகம்
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்

பெண்:
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிறந் தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிறந் தரம் நிறைந்தவன்

******************************************

ஆண்:
தொடாமலும் படாமலும்
உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும்
விடாது இந்த வாலிபம்

பெண்:
உன்னோடு தான் பின்னோடு தான்
வந்தாடும் இந்த மோகனம்
கையோடு தான் மெய்யோடு தான்
கொஞ்சாமல் என்ன தாமதம்

ஆண்:
உன் பார்வை யாவும் நூதனம்
பெண் பாவை நீ என் சீதனம்

பெண்:
உன் வார்த்தை அன்பின் சாசனம்
பெண் உள்ளம் உந்தன் ஆசனம்

ஆண்:
அள்ளாமலும் கிள்ளாமலும்
தள்ளாடும் இந்த பூவனம்

பெண்:
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிறந் தரம் நிறைந்தவன்

ஆண்:
வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

பெண்:
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்

ஆண்:
தராதரம் புரிந்தவன்
நிறந் தரம் நிறைந்தவன்

பெண்:
லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லாலா லாலா

******************************************

பெண்:
கல்யாணமும் வைபோகமும்
கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே
என் மாலை உந்தன் தோள் வரும்

ஆண்:
சல்லாபமும் உல்லாசமும்
கண் காணும் நேரம் சோபனம்
சொல்லாமலும் கொள்ளாமலும்
திண்டாடும் பாவம் பெண்மனம்

பெண்:
இந்நேரம் அந்த நியாபகம்
உண்டாக நீயும் காரணம்

ஆண்:
கண்ணார நாமும் காணலாம்
செவ்வாழைப் பந்தல் தோரணம்

பெண்:
என் ஆசையும் உன் ஆசையும்
அந்நாளில் தானே பூரணம்

ஆண்:
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிறந் தரம் நிறைந்தவன்

பெண்:
வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

ஆண்:
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்

பெண்:
தராதரம் புரிந்தவன்
நிறந் தரம் நிறைந்தவன்

******************************************

Tuesday, June 18, 2019

வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா - தாலாட்டுப்பாடவா பாடல் வரிகள்



படம்: தாலாட்டுப்பாடவா
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா

பெண் குழு:  ஆ ஆ ஆ ஆ

ஆண்:
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா

******************************************

பெண்:
உன்னை விட சொந்தம் எது
அன்பை விட சொர்க்கம் எது
உன்னை விட்டு நெஞ்சம் இது
எங்கே வாழப் போகின்றது

ஆண்:
கண்ணைத் தொட்டு வாழும் இமை
என்றும் தனியாகாதம்மா
உன்னையன்றி என் ஜீவன்தான்
இங்கே இனி வாழாதம்மா

பெண்:
உன்னோடு இல்லாத என்
வாழ்வு எப்போதும் ஏது ஏது

ஆண்:
ஒன்றான பின்னாலும் கண்மூட
நேரங்கள் ஏது ஏது

பெண்:
இது வானம் என வாழும் இனி மாறாது

ஆண்:
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா

******************************************

ஆண்:
சிந்தும் மழைச் சாரல் விழ
அங்கம் அதில் மோகம் எழ
சொந்தம் ஒரு போர்வை தர
சொர்க்கம் அது நேரில் வர

பெண்:
கன்னம் மது தேனைத் தர
கண்ணன் அதை நேரில் பெற
கன்னிக் குயில் தோளில் வர
இன்பம் சுகம் இங்கே வர

ஆண்:
எந்நாளும் இல்லாத எண்ணங்கள்
முன்னோட ஏக்கம் கூட

பெண்:
என்னுள்ளம் காணாத வண்ணங்கள்
வந்தாட தூக்கம் ஓட

ஆண்:
அலை போல மனம் ஓட புதுப் பண் பாட

பெண்:
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா
தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா

******************************************