படம்: தாலாட்டுப்பாடவா
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
பெண் குழு: ஆ ஆ ஆ ஆ
ஆண்:
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
******************************************
பெண்:
உன்னை விட சொந்தம் எது
அன்பை விட சொர்க்கம் எது
உன்னை விட்டு நெஞ்சம் இது
எங்கே வாழப் போகின்றது
ஆண்:
கண்ணைத் தொட்டு வாழும் இமை
என்றும் தனியாகாதம்மா
உன்னையன்றி என் ஜீவன்தான்
இங்கே இனி வாழாதம்மா
பெண்:
உன்னோடு இல்லாத என்
வாழ்வு எப்போதும் ஏது ஏது
ஆண்:
ஒன்றான பின்னாலும் கண்மூட
நேரங்கள் ஏது ஏது
பெண்:
இது வானம் என வாழும் இனி மாறாது
ஆண்:
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
******************************************
ஆண்:
சிந்தும் மழைச் சாரல் விழ
அங்கம் அதில் மோகம் எழ
சொந்தம் ஒரு போர்வை தர
சொர்க்கம் அது நேரில் வர
பெண்:
கன்னம் மது தேனைத் தர
கண்ணன் அதை நேரில் பெற
கன்னிக் குயில் தோளில் வர
இன்பம் சுகம் இங்கே வர
ஆண்:
எந்நாளும் இல்லாத எண்ணங்கள்
முன்னோட ஏக்கம் கூட
பெண்:
என்னுள்ளம் காணாத வண்ணங்கள்
வந்தாட தூக்கம் ஓட
ஆண்:
அலை போல மனம் ஓட புதுப் பண் பாட
பெண்:
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா
தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...