தமிழில் தேட.....

Friday, June 14, 2019

விழியிலே மணி விழியில் - நூறாவது நாள் பாடல் வரிகள்



படம்: நூறாவது நாள்
இசை: இளையராஜா

******************************************

ஆண்: விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்

பெண்: ம்ம் ம்ம்

ஆண்: உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்

ஆண்: விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்

பெண்: ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில்
நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்

******************************************

ஆண்: ஆ ஆஆ ஆ ஆ ஆஆ

ஆண்: கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது

பெண்: ஆ அஹஹ்ஹ

ஆண்: கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது (பெண்: ஹாஹா -சிரிப்பு overlap)

ஆண்:
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம்
இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

பெண்: விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்

ஆண்: பா பா பா பா…

பெண்: னா னா னா னா

******************************************

பெண்: காதல் தேவன் உந்தன்
கைகள் தீட்டும் நகவரி

ஆண்: ஆஹா

பெண்:
காதல் தேவன் (ஆண்: ஹாஹா - overlap சிரிப்பு)
உந்தன் கைகள் தீட்டும் நகவரி
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி
மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய என் பேரை உச்சரி
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்

ஆண்: ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில்
நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்

******************************************

1 comment:

  1. என்றும் பசுமையான பாடல்!

    ReplyDelete

உங்கள் கருத்து...