தமிழில் தேட.....

Sunday, June 16, 2019

மாமரத்து பூ எடுத்து - ஊமை விழிகள் பாடல் வரிகள்



படம்: ஊமை விழிகள்
இசை: மனோஜ் க்யான்

******************************************

ஆண்:  மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம் விரைவில் அரங்கேறிடும்
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா

******************************************

ஆண்:  ஓ ஓ ஓ  ஓ ஓ ஓ ஓ
கோரஸ்: ஹோய்யா
ஆண்:  ஓ ஓ ஓ  ஓ ஓ ஓ ஓ
கோரஸ்: ஹோய்யா

பெண்: கூந்தலில் பூச்சூடினேன்
கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது.
ஆ ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது
கூந்தலில் பூச்சூடினேன் கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது
ஆ ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது

ஆண்: கடலோடு பிறந்தாலும்
இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது

ஆண்:  மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா

******************************************

ஆண்: சித்திரப்பூவிழி பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா.
ஓ ஓ ஓ
முத்து ரதம் எனக்குத்தானம்மா
சித்திரப்பூவிழி பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா.
ஓ ஓ ஓ
முத்து ரதம் எனக்குத்தானம்மா

பெண்: உனக்காக உயிர் வாழ
இந்த பிறவி எடுத்தது
உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது
மாமரத்து பூ எடுத்து மங்கை என்னை தேடிவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி ஓடிவா
கண்ணா புது நாடகம் விரைவில் அரங்கேறட்டும்

இருவரும்: மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடலாம்
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடலாம்

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...