படம்: அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா
******************************************
பெண்:
உன் பார்வையில் ஓராயிரம்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
******************************************
பெண்: அசைத்து இசைத்தது
வளைக்கரம்தான்
ஆண்: இசைந்து இசைத்தது
புது ஸ்வரம் தான்
பெண்: சிரித்த சிரிப்பொலி
சிலம்பொலிதான்
ஆண்: கழுத்தில் இருப்பது
வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும்
எடுத்துக்கொடுக்கும்
பெண்: இருக்கும் வரைக்கும்
எடுத்துக்கொடுக்கும்
ஆண்: மனதை மயிலிடம்
இழந்தேனே
பெண்: மயங்கி தினம் தினம்
விழுந்தேனே
ஆண்: மறந்து
பெண்: இருந்து
ஆண்: பறந்து தினம் மகிழ
பெண்: உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
******************************************
பெண்: அணைத்து நனைந்தது
தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய்
தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தாய்
தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகச்சிறை இருப்பாயோ
இருந்து
விருந்து
இரண்டு மனம் இணைய
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான்
எழுதுவேன்
காற்றில் நானே
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...