தமிழில் தேட.....

Showing posts with label நீ ஒரு காதல் சங்கீதம். Show all posts
Showing posts with label நீ ஒரு காதல் சங்கீதம். Show all posts

Thursday, August 22, 2019

நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன் பாடல் வரிகள்



படம்: நாயகன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

பெண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்

******************************************

பெண்:
வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது

ஆண்:
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது

பெண்:
இசை மழை எங்கும்
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது

ஆண்:
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

பெண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
பெண்:
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
ஆண்:
நீ ஒரு காதல் சங்கீதம்

******************************************

ஆண்:
பூவை சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்

பெண்:
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்

ஆண்:
கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு

பெண்:
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

ஆண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
பெண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண்:
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
பெண்:
நீ ஒரு காதல் சங்கீதம்

******************************************