தமிழில் தேட.....

Showing posts with label நெஞ்சில் ஆடும் பூவொன்று. Show all posts
Showing posts with label நெஞ்சில் ஆடும் பூவொன்று. Show all posts

Tuesday, June 2, 2020

ஒரு மூடன் கதை சொன்னால்- நெஞ்சில் ஆடும் பூவொன்று பாடல் வரிகள்



படம் : நெஞ்சில் ஆடும் பூவொன்று
இசை : இளையராஜா

*********************************

ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம்
அட போடா
ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்

*********************************

கல்லரையிலே இருக்கின்ற பல சமாதிகள்
காதலிலே தோல்வியுற்றவைதான் போலிருக்கிறது

பெண்ணைப் படைக்காதே
பிரம்மனே
பாவம் ஆண்களே
பரிதாபம் நாங்களே

பெண்ணைப் படைக்காதே
பிரம்மனே
பாவம் ஆண்களே
பரிதாபம் நாங்களே

ஆலகாலமா விழியா
சொல்லடா
காதல் காவியம் வேஷமே ஓ

ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்

*********************************

பிரீத்தி உன்னைநினைக்க விரும்புகிறேன்
நீ விடவில்லை
உன்னை மறக்க விரும்புகிறேன்
அதுவும் முடியவில்லை

கல்லை உடைத்தாலும்
நீர் வரும்
பாலைவனங்களோ
அழகான பெண்களே

கல்லை உடைத்தாலும்
நீர் வரும்
பாலைவனங்களோ
அழகான பெண்களே

எந்த மடையனோ சொன்னான்
சொர்க்கமாம்
பெண்கள் உலகமே நரகமே ஓ

ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம்
அட போடா
ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்

*********************************

மருத மஞ்சக் கெழங்கு - நெஞ்சில் ஆடும் பூவொன்று பாடல் வரிகள்



படம்: நெஞ்சில் ஆடும் பூவொன்று
இசை: இளையராஜா

*********************************

பெண்:
தானா னானா னானா னானா னா
தானா னானா னானா னா
னானானா னானானா னானானா ஹா

பெண்:
மருத மஞ்சக் கெழங்கு
எம் மேல தான் வாசம்
உம் மேல தான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி

மருத மஞ்சக் கெழங்கு
எம் மேல தான் வாசம்
உம் மேல தான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி
மருத மஞ்சக் கெழங்கு

ஆண்:
ஏஏ ஏஏஏஏ ஏஏஏஏ
தானானா னானானா னானா னானா
தானானா னானா தானா னானா னானா

*********************************

ஆண்:
கிளிக்கொரு இணை உண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழ் உண்டு முத்தம் கொடுக்க

கிளிக்கொரு இணை உண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழ் உண்டு முத்தம் கொடுக்க
மூடாதே முந்தானைய போட்டு ஹோய்
முத்தாடும் வித்தைகள காட்டு

பெண்:
முடியாதையா இப்ப படியாதையா
ஒரு பூ மால நீ போட காலம் நேரம் பாரு

ஆண்:
மருத மஞ்சக் கெழங்கு
உம் மேல தான் வாசம்
எம் மேல தான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி
மருத மஞ்சக் கெழங்கு

*********************************

பெண்:
தழுவுற ஆசை தான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம் தான் பின்னால் இழுக்க

தழுவுற ஆசை தான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம் தான் பின்னால் இழுக்க
தானாக தள்ளாடுது தேகம்
தாளத்த விட்டோடுமா ராகம்

ஆண்:
விலகாததே விட்டுப் பிரியாததே
இது நேற்றல்ல இன்றல்ல நாளும் வாழும் சொந்தம்

பெண்:
மருத மஞ்சக் கெழங்கு
எம் மேல தான் வாசம்
உம் மேல தான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி

ஆண்:
மருத மஞ்சக் கெழங்கு
உம் மேல தான் வாசம்
எம் மேல தான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி

இருவர்: மருத மஞ்சக் கெழங்கு

Thursday, April 11, 2019

கோடி இன்பம் மேனி எங்கும் - (நெஞ்சில் ஆடும் பூவொன்று)



படம்:நெஞ்சில் ஆடும் பூவொன்று
இசை : இளையராஜா

**********************************************

பெண்:
லா லாலாலா லாலாலா லாலாலா லா
லா லா லா லா
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தீ என்று பேரைச்சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

**********************************************

பெண்:
இந்த சுகம் சொல்ல மொழி ஏது
இன்ப ரசம் பொங்கி வரும்போது
உந்தன் வசம்தானே இளமாது

ஆண்:
தேனில் ஊரும் பூச்செண்டு
தென்றல் கொஞ்சும் நாள்கண்டு
ஆனந்தம் தானாக என்னை தேடி வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தீ என்று பேரைச்சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

**********************************************

ஆண்:
கன்னம் என்னும் கிண்ணம் அழகாக
கொண்டு வரும் வண்ணம் எதற்காக
ஓவியங்கள் தீட்டும் எனக்காக

பெண்:
கண்ணில் ரெண்டு மீனாட
காதல் ஓடை நீராட
தூங்காமல் போராட
உந்தன் ஆசை வந்ததோ
லாலலா.. லாலாலலா..லாலாலாலலாலாலா

**********************************************

பெண்:
கங்கை நதி வந்து கடல் சேரும்
மங்கை நதி மன்னன் மடி சேரும்
மஞ்சள் நதி எங்கும் வழிந்தோடும்

ஆண்:
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று
நானும் சூடும் நாள் இன்று
பாசத்தில் நேசத்தில் இந்த உள்ளம் துள்ளுதோ

ஆண்:
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

பெண்:
ப்ரீத்தீ என்று பேரைச்சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ

ஆண்:
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

பெண்:
லாலா லாலா லாலா லாலா லாலா லாலாலா

ஆண்:
ஹும்ம் ம்ம் ஹும்ம்ம் ம்ம்ம்
ஹும்ம் ம்ம் ஹும்ம்ம் ம்ம்ம்
ஹும்ம் ம்ம் ஹும்ம்ம் ம்ம்ம்

**********************************************

Friday, January 11, 2019

வானம் எங்கே மேகம் எங்கே - (நெஞ்சில் ஆடும் பூவொன்று)

படம்:நெஞ்சில் ஆடும் பூவொன்று
இசை : இளையராஜா
------------------------------------------------------------------------------------------------


பெ:ஆ ஆ ஆ... ஆஅஆ ஆஅஆ ஆஅஆ ஆஆஆ
ஆ ஆ ஆ... ஆஅஆ ஆஅஆ ஆஅஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஅஆஆ ஆஆஆஆ ஆஅஆஅ ஆஅஆஆ
வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா
ஒரு வீணை கொண்டு வா
புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்
வானம் எங்கே மேகம் எங்கே

************சரணம் 1*******************


ஆ:விண்மீண்கள் தாலாட்ட‌
பூந்தென்றல் சீராட்ட‌
மலர் காமன் பாராட்ட‌
விண்மீண்கள் தாலாட்ட‌
பூந்தென்றல் சீராட்ட‌
மலர் காமன் பாராட்ட‌
இரு கண்கள் சந்திப்பு
நகை மாலை முல்லைப்பூ
பாடல் ஒன்று பாடச் சொல்லி
காதல் தேவன் ஆணை இட்டானோ
வானம் எங்கே
பெ:மேகம் எங்கே

************சரணம் 2*******************


பெ: ஆ ஆ
ஆ ஆ
நீராடும் தீர்த்தங்கள்
தேரோடும் மன்றங்கள்
பூங்கோலம் போடட்டும்
நீராடும் தீர்த்தங்கள்
தேரோடும் மன்றங்கள்
பூங்கோலம் போடட்டும்
இளங்காலை நேரங்கள்
கலைச்சோலை வாருங்கள்
தோகை ஒன்று பக்கம் வந்து
ஆடும் என்று சேதி சொல்லுங்கள்
ஆ:வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா
ஒரு வீணை கொண்டு வா
புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்
ஆ&பெ:வானம் எங்கே மேகம் எங்கே
ஆ&பெ:வானம் எங்கே மேகம் எங்கே