தமிழில் தேட.....

Showing posts with label மனதில் உறுதி வேண்டும். Show all posts
Showing posts with label மனதில் உறுதி வேண்டும். Show all posts

Sunday, June 30, 2019

சங்கத் தமிழ்க் கவியே - மனதில் உறுதி வேண்டும் பாடல் வரிகள்



படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ

பெண்:
சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ

ஆண்:
சங்கத் தமிழ்க் கவியே
ஏ ஏ ஏ ஏஏ ஏ

******************************************

பெண்:
மாதுளம் பூவிருக்க அதற்க்குள் வாசனைத் தேனிருக்க

ஆண்:
பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க

பெண்:
காதலன் கண்ணுரங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க

ஆண்:
ஒரு புறம் நான் அணைக்க
ஆ ஆ ஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறு புறம் நீ அணைக்க

பெண்:
சாத்திரம் மீறியே கீர்த்தனம் பாட
சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத் தமிழ்க் கவியே
சங்கத் தமிழ்க் கவியே

******************************************

பெண்:
பூங்குயில் பேதைத்தனைத் தேடத்தான் ஆண் குயில் பாடியதோ

ஆண்:
ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ
பெண்:
காதலன் கைத்தொடத்தான்
காதலன் கைத்தொடத்தான் இந்தக் கண்களும் தேடியதோ

ஆண்:
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்

பெண்:
தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம் தினம் நான் தவித்தேன்

ஆண்:
சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ

பெண்:
சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ

ஆண்:
சங்கத் தமிழ்க் கவியே
ஏ ஏ ஏ ஏஏ ஏ

******************************************

Sunday, June 16, 2019

கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும் பாடல் வரிகள்



படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா

******************************************

கோரஸ்:
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்

பெண்:
கண்ணா வருவாயா
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை
நதியோரம் நடந்து
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்

கோரஸ்:
கண்ணா கண்ணா கண்ணா

******************************************

ஆண்:
ஆ. ஆ. ஆ. ஆ.
நீலவானும் நிலவும் நீரும்
நீயென காண்கிறேன்

பெண்":
உண்ணும் போதும்
உறங்கும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

ஆண்:
கண்னன் வந்து நீந்திடாது
காய்ந்து போகும் பாற்கடல்

பெண்:
உன்னை இங்கு ஆடை போல
ஏற்றுக்கொள்ளும் பூவுடல்

ஆண்:
வேறில்லையே பிருந்தாவனம்

பெண்:
விடிந்தாலும் நம் ஆலிங்கணம்

ஆண்:
சொர்க்கம் இதுவோ
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை
நதியோரம் நடந்து
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்

******************************************

கோரஸ்:
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்

ஆண்:
மல்லிகைப் பஞ்சணையிட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம்  தீர்க்கவா
மல்லிகைப் பஞ்சணையிட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம் தீர்க்கவா

பெண்:
மன்மத மந்திரம் சொல்லி
வந்தனல் சுந்தரவள்ளி
ராகம்  சேர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி
வந்தனல் சுந்தரவள்ளி
ராகம்  சேர்க்கவா

ஆண்:
கொடி இடை ஒடிவதன் முன்னம்
மடியினில் எடுத்திடவா

பெண்:
மலர்விழி மயங்கிடும் வண்ணம்
மதுரசம் கொடுத்திடவா

ஆண்:
இரவு முழுதும் உறவு மழையிலே

பெண்:
இருவர் உடலும் நனையும் பொழுதிலே

ஆண்:
ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே

பெண்:
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்

ஆண்:
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்

பெண்:
மாலை மலர்ச்சோலை
நதியோரம் நடந்து

ஆண்:
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்

கோரஸ்:
கண்ணா கண்ணா  கண்ணா

******************************************