தமிழில் தேட.....

Showing posts with label வண்ண வண்ண பூக்கள். Show all posts
Showing posts with label வண்ண வண்ண பூக்கள். Show all posts

Friday, April 24, 2020

இள நெஞ்சே வா - வண்ண வண்ண பூக்கள் பாடல் வரிகள்



படம் : வண்ண வண்ண பூக்கள்
இசை : இளையராஜா

*********************************

இள நெஞ்சே வா
நீ இங்கே வா
இள நெஞ்சே வா  தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்

இள நெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில்
கையால் நாம் தொடலாம்

*********************************

பச்சைப்புல் மெத்தை விரிக்கும்
அங்கே இளம் தத்தைகள்
தத்தி குதிக்கும்
பட்டு பூ மொட்டு விரிக்கும்
செந்தேன் பெற
பொன்வண்டு வட்டம் அடிக்கும்
சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்
பட்சிகள் வாழும் கூடுகள்
மண்ணின் ஆடைப்போலே
வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம்
செம்மீன் தேடுதே
இந்நேரம்

இள நெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில்
கையால் நாம் தொடலாம்

கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில்
கையால் நாம் தொடலாம்

*********************************

அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டி குவிப்பேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்
வர்ணித்து பாடும் கவிஞன் நான்
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனைத் தேரில் ஏறியே
சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்
கண்ணில் காணும் யாவும்
என்னை தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு
விண்ணை தீண்டுதே
இந்நேரம்

இள நெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில்
கையால் நாம் தொடலாம்

*********************************

Sunday, January 13, 2019

கண்ணம்மா காதலென்னும் கவிதை - (வண்ண வண்ண பூக்கள்)

படம்: வண்ண வண்ண பூக்கள்
இசை: இளையராஜா
*********************************
ஆ: கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உன்பிள்ளை தமிழில்
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உந்தன் கிள்ளை மொழியினிலே
உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காணவேண்டும் கூடவேண்டும்
வாராயோ வாராயோ
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி

*******************

பெ:புன்னைமர தோப்போரம் உன்னை நினைந்து
முன்னம் சொன்ன குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன்
பொன்னி நதி கரையோரம் மன்னன் நினைவில்
கண்ணிமைகள் மூடாது கன்னி இருந்தேன்

ஆ:வெண்ணிலவின் ஒளி கனலாய் கொதிக்குதடி
எண்ணம் நிலையில்லாமல் தவிக்குதடி

பெ:உந்தன் செல்ல மொழியினிலே
உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காணவேண்டும் கூடவேண்டும்
வாராயோ வாராயோ
ஆ:கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உன்பிள்ளை தமிழில்
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி

*******************

ஆ: இன்னும் என்னை வெகுதூரம் கூட்டிச் செல்லடி
பண்ணிசையில் பாடங்கள் மாற்றி சொல்லடி
கன்னி உந்தன் மனக்கூண்டில் என்னைத் தள்ளடி
கண்ணசைத்து அங்கேயே வைத்துக் கொள்ளடி
பெ:மந்திரத்தை மாற்றாமல் கற்றுகொடுத்தால்
விந்தைகளை ஏராளம் சொல்லித் தருவேன்
உந்தன் செல்ல மொழியினிலே
உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காணவேண்டும் கூடவேண்டும்
வாராயோ வாராயோ
ஆ: கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உன்பிள்ளை தமிழில்
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உந்தன் கிள்ளை மொழியினிலே
பெ:உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன்
ஆ:துள்ளி துள்ளி வரும் நடையில்
பெ:மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
ஆ:உன்னை காணவேண்டும் கூடவேண்டும்
பெ:வாராயோ வாராயோ
ஆ:கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உன்பிள்ளை தமிழில்
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி