தமிழில் தேட.....

Sunday, January 13, 2019

கண்ணம்மா காதலென்னும் கவிதை - (வண்ண வண்ண பூக்கள்)

படம்: வண்ண வண்ண பூக்கள்
இசை: இளையராஜா
*********************************
ஆ: கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உன்பிள்ளை தமிழில்
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உந்தன் கிள்ளை மொழியினிலே
உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காணவேண்டும் கூடவேண்டும்
வாராயோ வாராயோ
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி

*******************

பெ:புன்னைமர தோப்போரம் உன்னை நினைந்து
முன்னம் சொன்ன குயில் பாட்டு சொல்லி மகிழ்ந்தேன்
பொன்னி நதி கரையோரம் மன்னன் நினைவில்
கண்ணிமைகள் மூடாது கன்னி இருந்தேன்

ஆ:வெண்ணிலவின் ஒளி கனலாய் கொதிக்குதடி
எண்ணம் நிலையில்லாமல் தவிக்குதடி

பெ:உந்தன் செல்ல மொழியினிலே
உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காணவேண்டும் கூடவேண்டும்
வாராயோ வாராயோ
ஆ:கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உன்பிள்ளை தமிழில்
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி

*******************

ஆ: இன்னும் என்னை வெகுதூரம் கூட்டிச் செல்லடி
பண்ணிசையில் பாடங்கள் மாற்றி சொல்லடி
கன்னி உந்தன் மனக்கூண்டில் என்னைத் தள்ளடி
கண்ணசைத்து அங்கேயே வைத்துக் கொள்ளடி
பெ:மந்திரத்தை மாற்றாமல் கற்றுகொடுத்தால்
விந்தைகளை ஏராளம் சொல்லித் தருவேன்
உந்தன் செல்ல மொழியினிலே
உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காணவேண்டும் கூடவேண்டும்
வாராயோ வாராயோ
ஆ: கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உன்பிள்ளை தமிழில்
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உந்தன் கிள்ளை மொழியினிலே
பெ:உள்ளம் கொள்ளையடிப்பதும் ஏன்
ஆ:துள்ளி துள்ளி வரும் நடையில்
பெ:மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
ஆ:உன்னை காணவேண்டும் கூடவேண்டும்
பெ:வாராயோ வாராயோ
ஆ:கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி
உன்பிள்ளை தமிழில்
கண்ணம்மா ஆஆஆ
காதலென்னும் கவிதை சொல்லடி

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...