தமிழில் தேட.....

Sunday, January 13, 2019

கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் - (நினைக்க தெரிந்த மனமே)

படம்: நினைக்க தெரிந்த மனமே
இசை: இளையராஜா

*********************************

ஸ்மைல் பிளீஸ்

கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் , வாழ்க வாழ்கவே
மாலைத் தென்றலே, மாலை கொண்டு வா
வேளை வந்ததே, வாழ்த்துப் பாட வா
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

******************

நினைக்கத் தெரிந்த மனம், மறக்கத் தெரிவதில்லை
கவிஞனின் கவிதை
உயிரின் உணர்வு இது, உணரும் தருணம் இது
நடத்தட்டும் வயதை
நினைக்கத் தெரிந்த மனம், மறக்கத் தெரிவதில்லை
கவிஞனின் கவிதை
உயிரின் உணர்வு இது, உணரும் தருணம் இது
நடத்தட்டும் வயதை
மாணிக்கத் தீவே, மாலைப் பூவே
காணக் கண் கோடி, வேண்டும் தாயே
ஆணிப்பொன் தேகம், ஆனந்த வேகம்
மாலைத் தென்றலே, மாலை கொண்டு வா
வேளை வந்ததே, வாழ்த்துப் பாட வா
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்

******************

புருவ கொடி பிடித்து, பருவ படை எடுத்து
ஜெயித்திடும் இனமே
அபயக் குரல் கொடுத்து, அழகு கரம் பிடித்து
அடைக்கலம் மனமே
புருவ கொடி பிடித்து, பருவ படை எடுத்து
ஜெயித்திடும் இனமே
அபயக் குரல் கொடுத்து, அழகு கரம் பிடித்து
அடைக்கலம் மனமே
தோற்றாலும் தேனே, நான் தான் ராஜா
ஏற்றுக் கொண்டால் தான், வாழ்வேன் ரோஜா
நேருக்கு நேராய், நெஞ்சத்தைப் பாராய்
மாலைத் தென்றலே, மாலை கொண்டு வா
வேளை வந்ததே, வாழ்த்துப் பாட வா
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...