தமிழில் தேட.....

Showing posts with label வெள்ளை ரோஜா. Show all posts
Showing posts with label வெள்ளை ரோஜா. Show all posts

Wednesday, July 17, 2019

ஓ மானே மானே மானே - வெள்ளை ரோஜா பாடல் வரிகள்



படம்: வெள்ளை ரோஜா
இசை: இளையராஜா

******************************************

ஆண்: ஓ மானே மானே மானே
உன்னைத்தானே
ஓ மானே மானே மானே
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே

பெண்: ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாலே சொக்கிப்போனேன்
நானே நானே

ஆண்: ஓ மானே மானே மானே

பெண்: உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்

ஆண்: சின்னப்பெண்ணே

******************************************

ஆண்: ஹேய் காலை பனித்துளி
கண்ணில் தவழ்ந்திட
கனவுகள் மலர்கிறது

பெண்: பார்வை தாமரை
யாரை தேடுது
பருவம் துடிக்கிறது

ஆண்: ஆசையின் மேடை
நாடகம் ஆடும்

பெண்: ஆயிரம் பாடல்
பாவையைத் தேடும்

ஆண்: நீ தேவன் கோவில் தேரோ
என் தெய்வம் தந்த பூவோ
நீ தேனில் ஊறும் பாலோ
தென்றல் தானோ ஹோய்

பெண்: ஓ மானே மானே மானே
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே

ஆண்: ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாலே சொக்கிப்போனேன்
தேனே தேனே

பெண்: ஓ மானே மானே மானே

ஆண்: உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்

பெண்: சின்னப்பெண்ணே

******************************************

பெண்: ஹேய் நீலபூவிழி
ஜாலம் புரியுது
நினைவுகள் இனிக்கிறது

ஆண்: காதல் கோபுரம்
ஏந்தும் ஓவியம்
கைகளில் தவழ்கிறது

பெண்: மந்திரம் ஒன்றை
மன்மதன் சொன்னான்

ஆண்: மார்பினில் ஆடும்
மேனகை வந்தாள்

பெண்: என் ஆசை நெஞ்சின் ராஜா
என் கண்ணில் ஆடும் ரோஜா
என் காதல் கோவில் தீபம்
கண்ணா வா வா ஹோய்

ஆண்: ஓ மானே மானே மானே
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே

பெண்: ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாலே சொக்கிப்போனேன்
நானே நானே

ஆண்: ஓஹ் ஓமானே மானே மானே

பெண்: உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்

ஆண்: சின்னப்பெண்ணே

******************************************

Tuesday, March 5, 2019

சோலைப்பூவில் மாலைத்தென்றல் - (வெள்ளை ரோஜா)

படம்: வெள்ளை ரோஜா
இசை: இளையராஜா

*********************************

ஆண்: சோலைப்பூவில்
மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

பெண்: புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர்க்கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்
சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்

ஆண்: ஆசை கொண்ட நெஞ்சம்
ரெண்டும் ஆடும் காலம்

*********************************

பெண்: சந்தனக்காடு
நான் உன் செந்தமிழ் ஏடு

ஆண்: மான்விழி மாது
நீயோ மன்மதன் தூது

பெண்: மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய்
நானும் வந்தேனே

ஆண்: தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே
நீயும் வந்தாயே
தாவிப்பாயும் மீனைப்போலே
நானும் ஆனேனே

பெண்: விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கே கண்டேனே

ஆண்: கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே

பெண்: லல லல லல லல

ஆண்: லல லல லல (இணைந்து பாடவும்)
ஆண்: சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
பெண்: ஆசை கொண்ட நெஞ்சம்
ரெண்டும் ஆடும் காலம்

*********************************

ஆண்: செந்நிலம் மேலே
தண்ணீர் சேர்ந்தது போலே

பெண்:ஆனது நெஞ்சம்
நீ என் வாழ்க்கையின் சொந்தம்

ஆண்: என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில்
நாளும் நீராடு

பெண்: கங்கை வெள்ளம் வற்றும் போதும்
காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும் போதும்
சிந்தை தேயாது

ஆண்: மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன்மேல் அன்பு மாறாது
பெண்: உன்னையன்றி தென்றல் கூட
எந்தன் தேகம் தீண்டாது

ஆண்: லல லல லல லல

பெண்: லல லல லா… (இணைந்து பாடவும்)

பெண்: சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

ஆண்: புது நாணம் கொள்ளாமல் (பெண்: ப.. ப் பா )
ஒரு வார்த்தை இல்லாமல் (பெண்: ப.. ப் பா )
மலர்க்கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்

இருவரும்: சோலைப்பூவில் மாலைத்தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

*********************************