தமிழில் தேட.....

Tuesday, March 5, 2019

சோலைப்பூவில் மாலைத்தென்றல் - (வெள்ளை ரோஜா)

படம்: வெள்ளை ரோஜா
இசை: இளையராஜா

*********************************

ஆண்: சோலைப்பூவில்
மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

பெண்: புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர்க்கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்
சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்

ஆண்: ஆசை கொண்ட நெஞ்சம்
ரெண்டும் ஆடும் காலம்

*********************************

பெண்: சந்தனக்காடு
நான் உன் செந்தமிழ் ஏடு

ஆண்: மான்விழி மாது
நீயோ மன்மதன் தூது

பெண்: மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய்
நானும் வந்தேனே

ஆண்: தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே
நீயும் வந்தாயே
தாவிப்பாயும் மீனைப்போலே
நானும் ஆனேனே

பெண்: விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கே கண்டேனே

ஆண்: கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே

பெண்: லல லல லல லல

ஆண்: லல லல லல (இணைந்து பாடவும்)
ஆண்: சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
பெண்: ஆசை கொண்ட நெஞ்சம்
ரெண்டும் ஆடும் காலம்

*********************************

ஆண்: செந்நிலம் மேலே
தண்ணீர் சேர்ந்தது போலே

பெண்:ஆனது நெஞ்சம்
நீ என் வாழ்க்கையின் சொந்தம்

ஆண்: என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில்
நாளும் நீராடு

பெண்: கங்கை வெள்ளம் வற்றும் போதும்
காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும் போதும்
சிந்தை தேயாது

ஆண்: மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன்மேல் அன்பு மாறாது
பெண்: உன்னையன்றி தென்றல் கூட
எந்தன் தேகம் தீண்டாது

ஆண்: லல லல லல லல

பெண்: லல லல லா… (இணைந்து பாடவும்)

பெண்: சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

ஆண்: புது நாணம் கொள்ளாமல் (பெண்: ப.. ப் பா )
ஒரு வார்த்தை இல்லாமல் (பெண்: ப.. ப் பா )
மலர்க்கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்

இருவரும்: சோலைப்பூவில் மாலைத்தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...