தமிழில் தேட.....

Friday, March 8, 2019

வருது வருது இளங்காற்று - (பிரம்மா)

படம்: பிரம்மா
இசை: இளையராஜா

*********************************

கோரஸ்:
ம் ம் ம் ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்
ம் ம் ம் ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆ ஆஅஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஅஆஆ ஆஆஆ ஆஆ


பெண்: வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

ஆண்: சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது

பெண்:  வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

*********************************

ஆண்: நாடியெங்கும் ஓடிச்சென்று
நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே

பெண்:  நேசம் என்னும் நெய்யை விட்டு
நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே

ஆண்: தோளில் உனை தாங்குவேன்
இதழ் தேனை தினம் வாங்குவேன்

பெண்:  கேளு பரிமாறுவேன்
அதில் நானும் பசியாறுவேன்

ஆண்: பாலும் தேனும் தீர தீர ஊறுமா

பெண்:  வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து

ஆண்: இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

*********************************

கோரஸ்:
துத்து துது துத்து துது துத்து துது
துத்து துது துத்து துது துத்து துது துத்து துது து
துத்து துது துத்து துது துத்து துது
துத்து துது துத்து துது துத்து துது துத்து துது து
துத்து துது துத்து துது துத்து துது து
துத்து துது துத்து துது துத்து துது து

பெண்:  ஊரைச் சுற்றும் தேரும் இன்று
சேரும் இடம் சேராமல் வாடுதே

ஆண்: தேவன் வந்தான்தேரைக்கண்டு
சோகம் இனி சொல்லாமல் ஓடுமே

பெண்:  நாளை சுப வேளைதான்
அதில் கூடும் மணமாலை தான்

ஆண்: நாளும் புது லீலைதான்
இனி ஏது இடைவேளை தான்

பெண்:  ஆடல் பாடல் ஆவல் தீர காணலாம்

ஆண்: வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

பெண்:  சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது

ஆண்: வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து

பெண்:  இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...