தமிழில் தேட.....

Thursday, March 14, 2019

மந்திரம் சொன்னேன் வந்துவிடு - (வேதம் புதிது)

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்

*********************************

ஆண்: மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே அதன்
பொருளைச் சொல்வாய் செந்தேனே
புதிய பாடம் சொல்வேனே அதன்
பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு

*********************************

ஆண்: கண்மணி உனக்கொண்ணு தெரியுமா
அந்த இடுப்பில் இருக்குது என் மனசு

பெண்: என் மனம் உனக்கென்ன புரியுமா
தண்ணிக் குடத்தில் துடிக்குது என்னுயிரு

ஆண்: நீ குளித்தால் நதியில் மணமிருக்கும்

பெண்: நீ ரசித்தால் கவியின் குணமிருக்கும்

ஆண்: வந்துவிட்டேன் மெல்ல மெல்ல

பெண்: தந்துவிட்டேன் என்ன சொல்ல

ஆண்: பாவமல்ல வேதங்கள் தடையல்ல
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு

*********************************

ஆண்: பொருத்தம் நமக்குள் இல்லையென்று
நீ நினைத்ததுண்டோ நெஞ்சுக்குள்ள

பெண்: தாமிரபரணி ஆத்துத் தண்ணி
அது ஜாதி பேதம் பார்ப்பதில்ல

ஆண்: நீ நினைத்தால் திருநீரணிந்திருப்பேன்

பெண்: நீ தடுத்தால் கோயில் மறந்திருப்பேன்

ஆண்: தொட்டதெல்லாம் வெற்றியடி

பெண்: வெற்றி தந்தாள் அல்லிக் கொடி

ஆண்: கட்டிப் பிடி

பெண்: காதல் வேதம் கற்பிக்க வா
காதில் வந்து ஒப்பிக்க வா
காதல் என்னை அழைக்குது
எங்கள் வேதம் என்னைத் தடுக்குது
காதல் பெரிதா வேதம் பெரிதா

இருவரும்: காதல்தானே ஜெயிக்குது

ஆண்: மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்
சம்மதம் எங்கே தந்துவிட்டாள்
காலம் நேரம் பாராமல் பிறர்
கண்கள் ஏதும் காணாமல்
காலம் நேரம் பாராமல் பிறர்
கண்கள் ஏதும் காணாமல்

இருவரும்: ஆற்று மணலில் பேர்கள்
எழுதி அழகு பார்ப்போம் அன்பே வா
அழகு பார்ப்போம் அன்பே வா
அழகு பார்ப்போம் அன்பே வா

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...