தமிழில் தேட.....

Showing posts with label தேவேந்திரன். Show all posts
Showing posts with label தேவேந்திரன். Show all posts

Sunday, October 13, 2019

கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது பாடல் வரிகள்



படம் :வேதம் புதிது
இசை: தேவேந்திரன்

*********************************

பெண்: பபப பபப

ஆண்: ததத ததத

பெண்: நிநிநி நிநிநி

ஆண்: ஸஸஸ ஸஸஸ

பெண்: நிரிகரி நிதபம கமபம கரிஸநி

ஆண்: த பநி த ஸ நிரி ஸ ரிகமப

பெண்: த பநி த ஸ நிரி ஸ நிதபமப

ஆண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா

ஆண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா

பெண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

*********************************


பெண்:
அம்பா சாம்பவி சந்த்ரமௌளி ராபளா
அபர்ணா உமா பார்வதி
காளி ஹைமவதி ஷிவத்ரி நயனா
காத்யாயினி பைரவி
சாவித்ரி நவயொவ்வன சுபஹரி
சாம்ராஜ்ய லஷ்மிப்ரதா

ஆண்:
தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா

பெண்:
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா

ஆண்:
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

பெண்:

சாத்திரம் தாண்டி தப்பி செல்வதேது

ஆண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

*********************************


குழு:
பூவே பெண் பூவே
இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம்
இது என்ன ரகசியம் இவன் மனம் புரியலயா

பெண்:
ஆணின் தவிப்பு அடங்கி விடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்

ஆண்:
உள்ளம் என்பது உள்ளவரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

பெண்:
என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது

ஆண்:
ரெண்டா ?
ஏது ?
ஒன்று பட்ட போது

பெண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை

ஆண்:
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா

பெண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

ஆண்:
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

Thursday, March 14, 2019

மந்திரம் சொன்னேன் வந்துவிடு - (வேதம் புதிது)

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்

*********************************

ஆண்: மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே அதன்
பொருளைச் சொல்வாய் செந்தேனே
புதிய பாடம் சொல்வேனே அதன்
பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு

*********************************

ஆண்: கண்மணி உனக்கொண்ணு தெரியுமா
அந்த இடுப்பில் இருக்குது என் மனசு

பெண்: என் மனம் உனக்கென்ன புரியுமா
தண்ணிக் குடத்தில் துடிக்குது என்னுயிரு

ஆண்: நீ குளித்தால் நதியில் மணமிருக்கும்

பெண்: நீ ரசித்தால் கவியின் குணமிருக்கும்

ஆண்: வந்துவிட்டேன் மெல்ல மெல்ல

பெண்: தந்துவிட்டேன் என்ன சொல்ல

ஆண்: பாவமல்ல வேதங்கள் தடையல்ல
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு

*********************************

ஆண்: பொருத்தம் நமக்குள் இல்லையென்று
நீ நினைத்ததுண்டோ நெஞ்சுக்குள்ள

பெண்: தாமிரபரணி ஆத்துத் தண்ணி
அது ஜாதி பேதம் பார்ப்பதில்ல

ஆண்: நீ நினைத்தால் திருநீரணிந்திருப்பேன்

பெண்: நீ தடுத்தால் கோயில் மறந்திருப்பேன்

ஆண்: தொட்டதெல்லாம் வெற்றியடி

பெண்: வெற்றி தந்தாள் அல்லிக் கொடி

ஆண்: கட்டிப் பிடி

பெண்: காதல் வேதம் கற்பிக்க வா
காதில் வந்து ஒப்பிக்க வா
காதல் என்னை அழைக்குது
எங்கள் வேதம் என்னைத் தடுக்குது
காதல் பெரிதா வேதம் பெரிதா

இருவரும்: காதல்தானே ஜெயிக்குது

ஆண்: மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்
சம்மதம் எங்கே தந்துவிட்டாள்
காலம் நேரம் பாராமல் பிறர்
கண்கள் ஏதும் காணாமல்
காலம் நேரம் பாராமல் பிறர்
கண்கள் ஏதும் காணாமல்

இருவரும்: ஆற்று மணலில் பேர்கள்
எழுதி அழகு பார்ப்போம் அன்பே வா
அழகு பார்ப்போம் அன்பே வா
அழகு பார்ப்போம் அன்பே வா

*********************************