தமிழில் தேட.....

Saturday, March 9, 2019

நதியில் ஆடும் பூவனம் - (காதல் ஓவியம்)

படம்: காதல் ஓவியம்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
அவித்யானா-மன்த-ச்திமிர-மிஹிர த்வீபனகரீ
ஜடானாம் சைதன்ய-ச்தபக மகரன்த ஶ்ருதிஜரீ |
தரித்ராணாம் சின்தாமணி குணனிகா ஜன்மஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா
முரரிபு வராஹச்ய பவதி|

பெண்:
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஆண்:
காமன் சாலை யாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

*********************************

பெண்:
குளிக்கும் போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை
ஆண்:
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் பிரம்ம தேவன் சாதனை
பெண்:
தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்து செல்லும் காமனை

ஆண்:
எதிர்த்து நின்றால்.....
ஆஆ ஆஆஆஆஆஆஆஆ
எதிர்த்து நின்றால் வேதனை

பெண்:
அம்பு தொடுக்கும் போது நீ துணை
சோதனை.....
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஆண்:
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்


ஆண்:
ஸ ரி நி. ஸ 
ப ம ரி க
ஸ ரி நி. ஸ  ப ம ரி க
த த ப ம
ம த நி ஸ் நி த ப ம
ம த நி ஸ்
ஸ் ஸ் ஸ் ஸ் 
ஸ் ஸ் ரி ரி
நி நி ஸ் ஸ்
த த த த
த த நி நி
ப ப த த
ரிமத நித பஸ்நித
ரிஸநித 
பமக தபம நிதப ஸ்நிதப
ஸஸ ரிரி கக ம 
ஸ்ஸ் நிநி தத பப ம
நி. ரி க ம ப

ஆண்:
சலங்கை ஓசை போதுமே
எந்தன் பசியும் தீர்ந்து போகுமே

பெண்:
உதய கானம் போதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊருமே

ஆண்:
இரவு முழுதும் கீதமே

பெண்:
நிலவின் மடியில் ஈரமே

ஆண்:
விரல்கள் விருந்து கேட்குமே

பெண்:
ஒரு விளக்கு விழித்து பார்க்குமே

ஆண்:
இதழ்கள் இதழை தேடுமே

பெண்:
ஒரு கனவு படுக்கை போடுமே
போதுமே...
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஆண்:
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

இருவரும்:
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்.....ம் ம் ம்

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...