படம்: அந்த ஏழு நாட்கள்
இசை: M S விஸ்வநாதன்
*********************************
ஆண் :
ஸகமப கமகஸ
நிஸநிப கமநிப ஸ ஸ
ஸகமப கமகஸ
நிஸநிப கமநிப ஸ ஸ
ககரி மமக
பபமபத ரிநிஸ
பெண் :
தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ
தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
*********************************
ஆண் :
உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை
இன்று தங்கரதம் ஏறியது
பெண் :
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை
இன்று கங்கை என மாறியது
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை
இன்று கங்கை என மாறியது
ஆண் :
இதுவரை கனவுகள்
இளமையின் நினைவுகள்
ஈடேறும் நாளின்றுதான்
பெண் :
எதுவரை தலைமுறை
அதுவரை தொடர்ந்திடும்
என்னாசை உன்னோடுதான்
ஆண் :
பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ
பெண் :
தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
*********************************
பெண் :
சந்தம் தேடி சிந்து பாடி
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்
ஆண் :
தஞ்சை கோவில் சிற்பம் போலே
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்
தஞ்சை கோவில் சிற்பம் போலே
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்
பெண் :
அனுதினம் இரவெனும்
அதிசய உலகினில்
ஆனந்த நீராடுவோம்
ஆண் :
தினமொரு புது வகை
கலைகளை அறிந்திடும்
ஏகாந்தம் நாம் காணுவோம்
பெண்:
பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ
ஆண் :
தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண் :
பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
இருவர் :
காவியம் தந்ததோ
*********************************