தமிழில் தேட.....

Showing posts with label அண்ணா நகர் முதல் தெரு. Show all posts
Showing posts with label அண்ணா நகர் முதல் தெரு. Show all posts

Thursday, September 26, 2019

என்ன கதை சொல்ல சொன்னா - அண்ணா நகர் முதல் தெரு பாடல் வரிகள்



படம்: அண்ணா நகர் முதல் தெரு
இசை:  சந்திரபோஸ்

******************************************

என்ன கதை சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

என்ன கதை சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

கண்ணில் கண்ட அத்தனையும்
கதையாய் போனது
இது போல் ஊரிலே
கதை எது

என்ன கதை சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

******************************************

நிலவில் ஆடினோம்
உறவில் கூடினோம்
கவிதை பாடினோம்
பழைய கதை

பல நாள் ஆசிகள்
ஒரு நாள் காத்திலே
உதிர்ந்தே போனது
புதிய கதை

அடடா யாவுமே முடிஞ்ச கதை
கனவா போனதே காதல் கதை

என்ன கதை சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

******************************************

இனியும் ஆயிரம்
ஜென்மம் உன்னுடன்
வருவேன் என்றது
அது கதையா

எவனோ நீயென
மனதில் எண்ணியே
மறந்தே போகிறாய்
இது கதையா

துடிக்கும் நெஞ்சிலே
நீ இல்லையா
துயரம் ஒன்று தான்
தொடர் கதையா

என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

கண்ணில் கண்ட
அத்தனையும் கதையாய்
போனது இது போல் ஊரிலே
கதை எது

என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

******************************************

Friday, September 13, 2019

மெதுவா மெதுவா - அண்ணா நகர் முதல் தெரு பாடல் வரிகள்



படம்: அண்ணா நகர் முதல் தெரு
இசை: சந்திரபோஸ்

******************************************

பெண்:
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த
மின்னல் கீற்று...
ஆஆ ஆஆஆஆ ஆஆ

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

******************************************

ஆண்:
உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம்
என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

பெண்:
இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது

ஆண்:
ஆஆ ஆஆஆஆ ஆஆ
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த
மின்னல் கீற்று

பெண்:
ஆஆ ஆஆஆஆ ஆஆ
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

******************************************

ஆண்: இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
பெண்: ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே

ஆண்: ஹா அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
பெண்: ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு

ஆண்:
ஒரு சொந்தம் ஒரு பந்தம்
இரு ஜீவன் ஒன்றாகும்

பெண்:
இளங் கன்னி உனை எண்ணி
உயிர் காதல் பண் பாடும்

ஆண்:
ஆஆ ஆஆஆஆ ஆஆ
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

பெண்: மலரும் மலரும் புது தாளம் போட்டு
ஆண்: புதுசா புதுசா அதை காதில் கேட்டு
பெண்: புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

இருவரும்:
ஆஆ ஆஆஆஆ ஆஆ
ஆஹா ஆ ஹா ஆ ஆ ஆ ஆஹா
ஆஹா ஆ ஹா ஆ ஆ ஆ ஆஹா
******************************************