தமிழில் தேட.....

Showing posts with label என்ன தான் சுகமோ நெஞ்சிலே. Show all posts
Showing posts with label என்ன தான் சுகமோ நெஞ்சிலே. Show all posts

Sunday, July 28, 2019

என்ன தான் சுகமோ நெஞ்சிலே - மாப்பிள்ளை பாடல் வரிகள்



படம்: மாப்பிள்ளை
இசை: இளையராஜா

******************************************

பெண்:
என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

ஆண்:
ராகங்கள் நீ பாடி வா பண்பாடும்
மோகங்கள் நீ காணவா என்னாளும்
காதல் உறவே
என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

******************************************

பெண்:
பூவோடு வண்டு புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்

ஆண்:
நான் சொல்லும் போது இரு கண்கள் மூடி
எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான்

பெண்:
இன்பம் வாழும் உந்தன் நெஞ்சம்

ஆண்:
தீபம் ஏற்றும் காதல் ராணி

பெண்:
சிந்தாத முத்துக்களை
நான் சேர்க்கும் நேரம் இது
காதல் உறவே

என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

******************************************

ஆண்:
தீராத மோகம் நான் கொண்ட நேரம்
தேனாக நீ வந்து சீராட்டத்தான்

பெண்:
காணாத வாழ்வு நீ தந்த வேளை
பூமாலை நான் சூட்டிப் பாராட்டத்தான்

ஆண்:
நீ என் ராணி நான் தான் தேனி

பெண்:
நீ என் ராஜா நான் உன் ரோஜா

ஆண்:
தெய்வீக பந்தத்திலே
நான் கண்ட சொர்க்கம் இது
காதல் உறவே

என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

பெண்:
ராகங்கள் நீ பாடி வா பண்பாடும்
மோகங்கள் நீ காணவா என்னாளும்
காதல் உறவே
என்ன தான் சுகமோ நெஞ்சிலே

ஆண்:
இது தான் வளரும் அன்பிலே

******************************************