தமிழில் தேட.....

Showing posts with label மாப்பிள்ளை. Show all posts
Showing posts with label மாப்பிள்ளை. Show all posts

Sunday, July 28, 2019

என்ன தான் சுகமோ நெஞ்சிலே - மாப்பிள்ளை பாடல் வரிகள்



படம்: மாப்பிள்ளை
இசை: இளையராஜா

******************************************

பெண்:
என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

ஆண்:
ராகங்கள் நீ பாடி வா பண்பாடும்
மோகங்கள் நீ காணவா என்னாளும்
காதல் உறவே
என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

******************************************

பெண்:
பூவோடு வண்டு புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்

ஆண்:
நான் சொல்லும் போது இரு கண்கள் மூடி
எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான்

பெண்:
இன்பம் வாழும் உந்தன் நெஞ்சம்

ஆண்:
தீபம் ஏற்றும் காதல் ராணி

பெண்:
சிந்தாத முத்துக்களை
நான் சேர்க்கும் நேரம் இது
காதல் உறவே

என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

******************************************

ஆண்:
தீராத மோகம் நான் கொண்ட நேரம்
தேனாக நீ வந்து சீராட்டத்தான்

பெண்:
காணாத வாழ்வு நீ தந்த வேளை
பூமாலை நான் சூட்டிப் பாராட்டத்தான்

ஆண்:
நீ என் ராணி நான் தான் தேனி

பெண்:
நீ என் ராஜா நான் உன் ரோஜா

ஆண்:
தெய்வீக பந்தத்திலே
நான் கண்ட சொர்க்கம் இது
காதல் உறவே

என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

பெண்:
ராகங்கள் நீ பாடி வா பண்பாடும்
மோகங்கள் நீ காணவா என்னாளும்
காதல் உறவே
என்ன தான் சுகமோ நெஞ்சிலே

ஆண்:
இது தான் வளரும் அன்பிலே

******************************************

Wednesday, June 12, 2019

மானின் இரு கண்கள் கொண்ட - மாப்பிள்ளை பாடல் வரிகள்



படம்: மாப்பிள்ளை
இசை: இளையராஜா

******************************************

கோரஸ்:
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம் ஜா
ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம் ஜா


ஆண்:
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே

பெண்:
உள்ளதெல்லாம்
அள்ளித் தரவா வா வா
வஞ்சி என்றும் வள்ளலல்லவா
காதல்
மல்லிகை வண்டாட்டம்தான்
போடு நீ கொண்டாட்டம்தான்

ஆண்:
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே

பெண்:
நன நன..நன்னா நன்னா.
நன நன..நன்னா நன்னா.

******************************************

ஆண்:
முக்குளித்து முத்தெடுத்து
சொக்கத் தங்க நூலெடுத்து
வக்கணையாய் நான் தொடுத்து
வண்ணமொழி பெண்ணுக்கென காத்திருக்க

பெண்:
மைகுழலில் பூ முடித்து
மங்கலமாய் பொட்டு வைத்து
மெய்யணைக்க கையணைக்க
மன்னவனின் நல்வரவை
பார்த்திருக்க

ஆண்:
இன்னும் ஒரு ஏக்கம் என்ன
என்னைத் தொடக் கூடாதா

பெண்:
உன்னைத் தொட தேனும் பாலும்
வெள்ளமென ஓடாதா

ஆண்:
முன்னழகும் பின்னழகும் ஆட
இளமை ஒரு முத்திரையை
வைப்பதற்கும் வாட
மயக்கும் இள
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே

பெண்:
ஜூஜூஜூஜூ ஜூஜூஜூஜூ ஜூஜூ ஜூஜூ
லலலல லலலல லலா லலா

******************************************

கோரஸ்:
இயாஹூ யா யா யா
இயாஹூ யா யா யா
இயாஹூ யா யா யா
இயாஹூ யா யா யா
இயாஹூ இயாஹூ இயாஹூ யா
இயாஹூ இயாஹூ இயாஹூ யா

பெண்:
ஊசியிலை காடிருக்க
உச்சிமலை மேடிருக்க
பச்சக்கிளி கூடிருக்க
பக்கம் வர வெக்கம் என்ன
மாமனுக்கு

ஆண்:
புல்வெளியில் மெத்தையிட்டு
மெத்தையிலே உன்னையிட்டு
சத்தமிட்டு முத்தமிட
உத்திரவு இட்டுவிடு நீயெனக்கு

பெண்:
அந்திப்பகல் மோகம் வந்து
அங்கும் இங்கும் போராட

ஆண்:
எந்தப்புறம் காணும் போதும்
அந்தப்புரம் போலாக

பெண்:
செங்கரும்பு சாரெடுக்கத்தானே
உனக்கு ஒரு சம்மதத்தைத்
தந்துவிட்டேன் நானே

ஆண்:
மயக்கும் இள
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே

பெண்:
உள்ளதெல்லாம்
அள்ளித் தரவா வா வா
வஞ்சி என்றும் வள்ளலல்லவா
காதல்
மல்லிகை வண்டாட்டம்தான்
போடு நீ கொண்டாட்டம்தான்

ஆண்:
மானின் இரு கண்கள் கொண்ட
மானே மானே
தேனின் சுவை கன்னம் கொண்ட
தேனே தேனே

பெண்:
நநநந நநநந நநா நநா
லலலல லலலல லலா லலா
******************************************