தமிழில் தேட.....

Showing posts with label கிராமத்து அத்தியாயம். Show all posts
Showing posts with label கிராமத்து அத்தியாயம். Show all posts

Sunday, May 17, 2020

பூவே இது பூஜை - கிராமத்து அத்தியாயம் பாடல் வரிகள்


படம்: கிராமத்து அத்தியாயம்
இசை: இளையராஜா

*********************************

பூவே
இது பூஜை காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க
நாளும் வேண்டுமே

நாளும்‌ உனை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும்‌ உள்ளம்‌ பாடாதோ
வாழையென வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ

பூவே
இது பூஜை காலமே

*********************************

சலங்கை தாளமே
எந்தன்‌ காதில்‌ கேட்குமோ
குயிலே ஏஏஏஏஏஏஏஏஏ
சலங்கை தாளமே
எந்தன்‌ காதில்‌ கேட்குமோ
வாழை மாவிலை
மஞ்சள்‌ வாசம்‌ தோன்றுமோ
பனி வாடைக்‌ காற்று வீசும்போது
பாவி மேனி வாடுதே

பூவே
இது பூஜை காலமே

*********************************

கண்ணை மூடியும்‌
மனம்‌ தூங்கவில்லையே
நெஞ்சே ஏஏஏ ஏஏஏஏஏஏ
கண்ணை மூடியும்‌
மனம்‌ தூங்கவில்லையே
கண்ணன்‌ ஞாபகம்‌ உன்னில்‌ நீங்கவில்லையே
திருமாலை சேர்ந்த தேவி ஏக்கம்‌
தரவேண்டி ஏங்குதே

பூவே
இது பூஜை காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க
நாளும் வேண்டுமே

நாளும்‌ உனை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும்‌ உள்ளம்‌ பாடாதோ
வாழையென வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ

பூவே

*********************************

Saturday, May 16, 2020

ஊத காத்து வீசயிலே - கிராமத்து அத்தியாயம் பாடல் வரிகள்



படம்: கிராமத்து அத்தியாயம்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே

கொஞ்சிடும் ஆசையிலே  குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது  வாட்டுது

பெண்:
யே ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே
கொஞ்சிடும் ஆசையிலே  குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது  வாட்டுது
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே

*********************************

பெண்:

கொத்தமல்லி பூவாசம் அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா  மோகமா

கொத்தமல்லி பூவாசம் அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா  மோகமா

ஆண்:
நான் என்னத்த செய்ய ஆஆஆஆஆ

இருவரும் : நான் என்னத்த செய்ய

பெண்:
நீ வந்து கைய
தொட்டதும் ஏறுது
ஆசை கட்டளை போட்டு
கட்டுறபாட்டு என்னயும் மீறுது
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே

*********************************

பெண்:
பக்கத்திலே நீ வேணும்
கட்டி கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது
பக்கத்திலே நீ வேணும்
கட்டி கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது

ஆண்:
அத சொல்லடி புள்ள
ஆஆஆ ஆஆ ஆஆஆஆ

பெண்:
அத சொல்லுறபுள்ள வெக்கத்தமெல்ல
விட்டுட்டுபேசுது
நீயும் அள்ளுறபோதும் கிள்ளுறபோதும்
அசந்து பாக்குது
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே


*********************************


பெண்:
வாசமுள்ள பூமுல்ல
வாடைபட்டுத்தான் மெல்ல
வாடுறேன் ரொம்ப நேரமா ஓரமா

ஆண்:
அத எங்கிட்டசொல்லு

பெண்:
யேயே யேயே யேயே  ஆஆஆ ஆஆ ஆஆ
அத உங்கிட்ட சொன்னா அசந்த பொண்ணா
என்னையும் மெரட்டுது நீ பாக்குற போதும்
கேக்குறபோதும் பார்வையும் மெரட்டுது
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே
கொஞ்சிடும் ஆசையிலே  குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது  வாட்டுது
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே

*********************************

ஆத்து மேட்டுல - கிராமத்து அத்தியாயம் பாடல் வரிகள்



படம்: கிராமத்து அத்தியாயம்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
ம் ஹ்ம் ஹ்ம்
ம் ஹ்ம் ஹ்ம்
லால லால லா
லா லால லால லா
லால லால லா லால லா
லா லால லால லா
லா லால லால லா

ஆண்:
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது


பெண்:
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது

*********************************

ஆண்:
காட்டுல
கட்டில் ஒண்ணு போடவா
கையில
கட்டி கொண்டு ஆடவா

பெண்:
ஏஹே என்ன ஆசை
ஏக்கம் வந்து பேச

ஆண்:
கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னி பொண்ண காணும்போது
ஆத்து மேட்டுல

பெண்: ஒரு பாட்டு கேக்குது

ஆண்:
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு

பெண்:
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது

*********************************

ஆண்:
கேக்கவா
ஒண்ணே ஒண்ணு கேக்கவா
சேக்கவா
கையில் உன்ன சேக்கவா

பெண்:
ஊஹும் மாட்டேன் மாட்டேன்
ஏதும் பேச மாட்டேன்

ஆண்:
சொல்ல சொல்ல வேகம் ஏறுது
தூக்கிகிட்டு போக போறேன்
ஆத்து மேட்டுல

பெண்: ஆ

ஆண்: ஒரு பாட்டு கேக்குது

பெண்:
ஆஹா
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது

*********************************