படம்: கிராமத்து அத்தியாயம்
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே
கொஞ்சிடும் ஆசையிலே குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது
பெண்:
யே ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே
கொஞ்சிடும் ஆசையிலே குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே
*********************************
பெண்:
கொத்தமல்லி பூவாசம் அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா மோகமா
கொத்தமல்லி பூவாசம் அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா மோகமா
ஆண்:
நான் என்னத்த செய்ய ஆஆஆஆஆ
இருவரும் : நான் என்னத்த செய்ய
பெண்:
நீ வந்து கைய
தொட்டதும் ஏறுது
ஆசை கட்டளை போட்டு
கட்டுறபாட்டு என்னயும் மீறுது
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே
*********************************
பெண்:
பக்கத்திலே நீ வேணும்
கட்டி கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது
பக்கத்திலே நீ வேணும்
கட்டி கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது
ஆண்:
அத சொல்லடி புள்ள
ஆஆஆ ஆஆ ஆஆஆஆ
பெண்:
அத சொல்லுறபுள்ள வெக்கத்தமெல்ல
விட்டுட்டுபேசுது
நீயும் அள்ளுறபோதும் கிள்ளுறபோதும்
அசந்து பாக்குது
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே
*********************************
பெண்:
வாசமுள்ள பூமுல்ல
வாடைபட்டுத்தான் மெல்ல
வாடுறேன் ரொம்ப நேரமா ஓரமா
ஆண்:
அத எங்கிட்டசொல்லு
பெண்:
யேயே யேயே யேயே ஆஆஆ ஆஆ ஆஆ
அத உங்கிட்ட சொன்னா அசந்த பொண்ணா
என்னையும் மெரட்டுது நீ பாக்குற போதும்
கேக்குறபோதும் பார்வையும் மெரட்டுது
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே
கொஞ்சிடும் ஆசையிலே குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது வாட்டுது
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...