தமிழில் தேட.....

Saturday, May 23, 2020

பூவென்றும் பொன்னே என்றும் - துருவ நட்சத்திரம் பாடல் வரிகள்



படம்: துருவ நட்சத்திரம்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம் தான்
உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம் தான்

பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

*********************************

பெண்:
தேகத்திலே தந்த மோகத்திலே
வந்த வேகத்தில் விளைந்ததென்ன

ஆண்:
நேரத்திலே வந்த பாரத்திலே
இதழ் ஈரத்தில் மலர்ந்ததென்ன

பெண்:
தோற்றத்திலே மனம் தோற்றதிலே
தூக்கம் கெட்டு உனைப் பார்த்ததிலே

ஆண்:
பூ மாலை போல் என்னை
நீ சேரும் பொன் மாலை
நான் காண்பேன் ஆனந்தம்

பெண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

*********************************

ஆண்:
சொர்கத்திலே உந்தன் பக்கத்திலே
தந்த சொந்தத்தில் சுகம் வடித்தேன்

பெண்:
கூடத்திலே மணி மாடத்திலே
தந்த பாடத்தில் எனை இழந்தேன்

ஆண்:
கூந்தல் என்னும் ஒரு வீட்டுக்குள்ளே
கூடு கட்டும் இசைப் பூங்குயிலே

பெண்:
பூ மேனி நூலானேன்
பூ இன்று ஆளானேன்
பாலாடை போல் ஆனேன்

ஆண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

பெண்:
பூந்தேகம் நீ ஏந்தும்
பொன்னோடம் தான்

ஆண்:
உன் மோகம் என் நெஞ்சின்
பூபாளம் தான்

பெண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

ஆண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...