படம் : எச்சில் இரவுகள்
இசை : இளையராஜா
*********************************
ஆண்:
பூமேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீசமாட்டாயா
பூமேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீசமாட்டாயா
பெண்:
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
கண் வாசலில் உன் வாசமோ
ஆண்:
கண் வாசலில் உன் வாசமோ
பூமேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீசமாட்டாயா
*********************************
ஆண்:
தெருவோரம் தினம் பாடல்
பாடும் நெஞ்சில் நீயே
புதிதாக பல தாளம்
போடும் கண்ணில் யாரோ
நானோ தினம் தானம் கேட்க்கும்
காதல் பிச்சைககாரன்
பெண்:
உன் மார்பில் நான் சாய்ந்தாடும்
பொன்னான நாள் வாராதோ
உன் மார்பில் நான் சாய்ந்தாடும்
பொன்னான நாள் வாராதோ
நினைத்தால் கொடுப்பேன்
கண்ணா இன்னும் ஏன் தாகமோ
கண் வாசலில் உன் வாசமோ
ஆண்:
பூமேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீசமாட்டாயா
*********************************
பெண்:
நடை பாதை எங்கள் நாடு
நீயே அங்கு ராஜா
இரவாகி வரும்போது
நானே உந்தன் ராணி
நானோதினம் தானம் கேட்க்கும்
காதல் பிச்சைக்காரி
ஆண்:
அச்சாரம் தான் ரோசாப்போ
முத்தாடவா ராசாத்தீ
அச்சாரம்தான் ரோசாப்போ
முத்தாடவா ராசாத்தீ
சிரிப்பாய் விரிப்பாய்
பாயில் என்னை பாராட்டுவாய்
கண் வாசலில் உன் வாசமோ
பெண்:
பூமேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீசமாட்டாயா
பூமேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீசமாட்டாயா
ஆண்:
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
கண் வாசலில் உன் வாசமோ
பெண்:
கண் வாசலில் உன் வாசமோ
ஆண்:
பூமேலே வீசும் பூங்காற்றே
பெண்:
என் மேல் வீசமாட்டாயா
இருவரும்:
என் மேல் வீசமாட்டாயா
என் மேல் வீசமாட்டாயா
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...