படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
*********************************
ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஹா ஆஅ ஆ ஆஅ
ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
முதல் முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
என்னங்களோ அலை மோதுதம்மா
புது ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
முதல் முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
*********************************
வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல்
கவிதை அரங்கேருமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல்
கவிதை அரங்கேருமோ
தேவி உன் கோவில் வாசல் முன்னாலே
காவியம் தேனென பூமியில்
முதல் முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
முதல் முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
*********************************
ஆனந்த கங்கை வெள்ளம்
பொங்கப் பொங்க
ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும்
அம்பிகைக்கே சொந்தம்
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க
கற்ற வித்தை என்றும் செழிக்க
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க
கற்ற வித்தை என்றும் செழிக்க
முத்து ரத்தினம் சிந்தும் நித்தினம்
அன்னை உன்னை வணங்கி நின்று
ராக தீபம் ஏற்றும்
நல்ல நேரமிது
புது வித ராக தீபம் ஏற்றும்
நல்ல நேரமிது
கான மழை இனி நான் பொழிவேன்
தேன் மழையில் இனி நீ நனைவாய்
புது ராக தீபம் ஏற்றும்
நல்ல நேரமிது புது வித
ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...