தமிழில் தேட.....

Sunday, May 24, 2020

கண்ணா வா கவிதை - மரகத வீணை பாடல் வரிகள்



படம்: மரகத வீணை
இசை: இளையராஜா

*********************************


கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா
துணைவா
என்ன சோதனை ஜீவ வேதனை
கான வேளை காணவில்லை நாதனை
கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா

************************************

சுதி சேரும் முன்பே
இசை பாட வந்தேன்
விதி சேரும் முன்பே
விளையாட வந்தேன்

புறாவை போல வாழ்ந்தவள்
நிலாவை போல தேய்கிறேன்
வராத மேடை வந்தவள்
அனாதை போல பாடினேன்

இளைய மேகம் திரும்புமா
எனது மண்ணில் பொழியுமா
உறவுப்பூக்கள் அரும்புமா

கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா
துணைவா

**************************************

உரு தந்தவனை இவள் பாடுகின்றாள்
வரம் தந்தவனை இவள் தேடுகின்றாள்

வராத கூட்டம் வந்தது
சங்கீதம் செய்த வேளையோ
இந்நேரம் உன்னை தேடினேன்
என்னோடு என்ன லீலையோ

எந்தன் கண்ணில் நீர் வரும்
என்று உந்தன் பேர் வரும்
இணைய வேண்டும் இருவரும்

கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா
என்ன சோதனை ஜீவ வேதனை
கான வேளை காணவில்லை நாதனை
கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா

***********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...