தமிழில் தேட.....

Sunday, May 10, 2020

தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌ - பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்


படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

ம்ம்‌ ம்‌ ம்‌ ம்ம்‌
ம்ம்ம்‌ ம்‌ ம்‌ ம்ம்ம்‌

தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது
கண்கள்‌ ஓரம்‌ பொங்கும்‌ ஈரம்‌
நாளும்‌ காணும்‌ மாது
சுடு நெருப்பின்‌ மீது
மலர்‌ விழுந்தது
இனி வசந்தம்‌ ஏது மனம்‌ தவிக்குது
தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது

*********************************

பூவை எந்தன்‌ உள்ளம்‌
தேவன்‌ வாழும்‌ இல்லம்‌
பூவை எந்தன்‌ உள்ளம்‌
காற்றிலே மேகம்‌ போல்‌
எந்தன் ஆசை தேய்ந்ததே

வாராயோ கேளாயோ
எழில்‌ முழுமதி தேய்கிறதே

தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது
கண்கள்‌ ஓரம்‌ பொங்கும்‌ ஈரம்‌
நாளும்‌ காணும்‌ மாது
சுடு நெருப்பின்‌ மீது
மலர்‌ விழுந்தது

*********************************

வெள்ளி வண்ண ஆடை
நெஞ்சில்‌ கொண்ட பாவை
வெள்ளி வண்ண ஆடை
நெஞ்சில்‌ கொண்ட பாவை

மின்னலை தேடியே
தாழம்பூவும்‌ ஏங்குதே

பாராயோ கேளாயோ
இரு மனம்‌ அலை மோதிடுதே

தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது
சுடு நெருப்பின்‌ மீது
மலர்‌ விழுந்தது
இனி வசந்தம்‌ ஏது மனம்‌ தவிக்குது
தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது
ம்ம்‌ ம்‌ ம்‌ ம்ம்‌
ம்ம்ம்‌ ம்‌ ம்‌ ம்ம்ம்‌

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...