தமிழில் தேட.....

Friday, May 22, 2020

வராத காலங்கள் - நதியை தேடி வந்த கடல் பாடல் வரிகள்



படம்: நதியை தேடி வந்த கடல்
இசை: இளையராஜா

*********************************

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா
ஒரு தெய்வம்‌ வந்தது
என்‌ சோகம்‌ கண்டது
காவலாய்‌ நின்றது

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா

*********************************

காலங்கள்‌ மாறும்‌ கவலைகள்‌ தீரும் ‌
காத்திருந்தால்‌
தாயிடம்‌ பிள்ளை சேர்ந்தது முல்லை
யார் மறுப்பார்

நடுவில்‌ வந்தவர்‌ கெடுதல்‌ செய்தவர்‌
உறவை அங்கும்‌ இங்குமாகதான்‌ மாற்றினார்‌
இது காலம்‌ செய்த கோலம்‌ அன்றி வேறேது

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா

*********************************

பேதையைப் போல வாழ்ந்து விட்டேனே
சூழ்ச்சியினால்
பிள்ளையை இன்று பார்த்து விட்டேன் உன்
ஆதரவால்
நன்றி சொல்லுவேன் என்றும் என்றுமே
மனதில் இன்பம் கோடியாக நீ காட்டினாய்
இனி நானும் எந்தன் பிள்ளை கூட வாழ்வேனே

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா
ஒரு அன்னை நெஞ்சிலே புது இன்பம் சேர்ந்தது
தாய்மையைக் கண்டது

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா

*********************************




No comments:

Post a Comment

உங்கள் கருத்து...