தமிழில் தேட.....

Tuesday, May 19, 2020

முதல் முத்த மோகம் - புதிர் பாடல் வரிகள்



படம்: புதிர்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது சுவை சுகம்
நான் கண்டேன்
முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்

*********************************

ஆண்:
தேவை இந்த பாவை என்று
ஆசைத்  தேடுதே
பூவை சூடும் பூவை மீது
மாலைப்  போடுதே

பெண்:
மோதல் காதல் ஆனதே
ராகம் தாளம் சேருதே

ஆண்:
பூந்தேரோடும் பாதையில்
மான் நீராடுதோ

பெண்:
நான் காணாத மோகமே
என் போராடுதோ

ஆண்:
தேகம் எங்கும் தாகம்
இன்ப தேனில் ஊரும் வேகம்
சுகமே

பெண்:
முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்

*********************************

பெண்:
கண்ணில் நாணும் மின்னல் உந்தன்
கையில் காணுதே
கைகள் தீண்டும் பொது தேகம்
பெண்மை காணுதே

ஆண்:
காதல் ராஜ கோபுரம்
காண வேண்டும் சீக்கிரம்

பெண்:
நீ தூங்காத ராவிலே
நான் தாலாட்டுவேன்

ஆண்:
நீ தாலாட்டும் பாடலை
நான் பாராட்டுவேன்

பெண்:
கீதம் பாடும் வானம்பாடி
நானும் நீயும் ஆவோம்
புதுமை

முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது சுவை சுகம்
நான் கண்டேன்
முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...