படம்: அர்ச்சனை பூக்கள்
இசை: இளையராஜா
*********************************
பெண்:
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
மணி ஆத்தோட நானும்
ஒரு சேதி கேட்டேன்
காதோரமா
இளம் காத்தோடு ராகம்
கல்யாண மேளம்
ஆதாரமா
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
*********************************
ஆண்:
புள்ளி மயில் முகத்தில்
வெள்ளி ரதம் இழுத்து
உள்ளம் என்னும் இடத்தில
உற்சவத்தை நடத்த
புள்ளி மயில் முகத்தில் முகத்தில்
வெள்ளி ரதம் இழுத்து இழுத்து
உள்ளம் என்னும் இடத்தில இடத்தில
உற்சவத்தை நடத்த
ஆளோட அரசாட்சி ஆலிங்கனம்
ஆனந்தம் இல்லாட்டி நானெங்கேனோ
அம்மா நீ மறவாதே சாயந்தரம்
ஆலிங்கனம் நூறாகனும்
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
*********************************
பெண்:
வேதம் சொல்லி கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து
அம்மனையும் அழைச்சா
என்ன உந்தன் கருத்து
வேதம் சொல்லி கொடுத்து கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து படித்து
அம்மனையும் அழைச்சா அழைச்சா
என்ன உந்தன் கருத்து
என்னத்த சொன்னாலும் எனக்கில்லையா
என் போல உள்ளாச உனக்கில்லையா
உன்னோடு ஒண்ணானா கணக்கில்லையா
கணக்கில்லையா கூட்டுங்கய்யா
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
ஆண்:
மணி ஆத்தோட நானும்
ஒரு சேதி கேட்டேன்
காதோரமா
பெண்:
இளம் காத்தோடு ராகம்
கல்யாண மேளம்
ஆதாரமா
இருவரும்:
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...