படம்: மரகத வீணை
இசை: இளையராஜா
*********************************
பெண்:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது
அது ஏன் இனிக்கிது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது
தேன் குளத்துல தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
குழு:
ஆஹா அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
பெண்:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது
***************************
பெண்:
ஆத்தோரம் ஒரு கிளி காத்தாடும் நேரம்
கூட்டாளி ஒரு கிளி கூத்தாடி போகும்
ஆத்தோரம் ஒரு கிளி காத்தாடும் நேரம்
கூட்டாளி ஒரு கிளி கூத்தாடி போகும்
ஏதேதோ மெல்ல மெல்ல
காதோட சொல்ல சொல்ல
ஜோரா சிரிச்சிக்கிரிச்சாம்
என்னென்ன சீதனம் கேட்குதே
என்றது பெண் கிளியே
ஆசை வந்துருச்சே நெஞ்சுக்குள்ள
அன்பு வந்துருச்சே
இன்னும் என்ன தங்க நகைகளும்
வைர நகைகளும் தேவையில்லையடி
குழு:
அடி அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
ஆஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா
பெண்:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது
குழு:
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது
பெண்:
அது ஏன் இனிக்கிது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது
குழு:
தேன் குளத்துல தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது
பெண்:
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
குழு:
ஆஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா
***************************************
பெண்:
பால் போல அருவியில் யாரோட சேலை
நூலின்றி யார் வந்து நெய்தார் இங்கே
மேங்கங்கள் அணிந்திடும் ஆடைகள் மேலே
யாரந்த கிழிசலை தைத்தார் அங்கே
கொம்பாதி கொம்பர்களும் கொம்பேறி மூக்கர்களும்
வந்தே கைக்கட்டி நிக்கோணும்
சந்தனம் பூசிய சூரியன் வந்தது பாருங்களேன்
வானம் எட்டுதடி கையிரண்டும் மேளம் கொட்டுதடி
இன்னும் என்ன ஆசைப்பட்டது
யாரும் கிட்டுது கூவு ஏன் குயிலே
குழு:
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
ஆஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா
பெண்:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது
குழு:
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது
பெண்:
அது ஏன் இனிக்கிது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது
குழு:
தேன் குளத்துல தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது
பெண்:
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
குழு:
ஆஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா
பெண் & குழு:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது
***************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...