தமிழில் தேட.....

Monday, May 18, 2020

வழிமேல் விழியாய் - அர்ச்சனை பூக்கள் பாடல் வரிகள்



படம்: அர்ச்சனை பூக்கள்
இசை: இளையராஜா

*********************************

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

சுகம் ஏகாந்தமாய் மலர
அது ஆகாயமாய் விரிய
வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

*********************************

ஒரு நாதன் கை கூடும்
திருநாளும் கைக்கூடும்
குழல் நீளும் மலர் சூடும்
வளைக் கோலம் நலம் பாடும்

ஒரு நாதன் கை கூடும்
திருநாளும் கைக்கூடும்
குழல் நீளும் மலர் சூடும்
வளைக் கோலம் நலம் பாடும்

அலங்காரம் அரங்கேறும்
புது நாணம் உருவாகும்
அலங்காரம் அரங்கேறும்
புது நாணம் உருவாகும்

மணமாலை கொள்ளும்
வேளை வந்தால் வைபோகமே

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

*********************************

உனை நாளும் அர்ச்சிக்க
எனை நீயும் வர்ணிக்க
ஒரு பந்தம் ஒரு சொந்தம்
அது பாடும் புது சந்தம்

உனை நாளும் அர்ச்சிக்க
எனை நீயும் வர்ணிக்க
ஒரு பந்தம் ஒரு சொந்தம்
அது பாடும் புது சந்தம்

சுக நாதம் சுப கீதம்
இரு நெஞ்சம் இசை போடும்
சுக நாதம் சுப கீதம்
இரு நெஞ்சம் இசை போடும்
பல ராகம் தாளம்
பாவம் யாவும் உண்டாகிட

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

சுகம் ஏகாந்தமாய் மலர
அது ஆகாயமாய் விரிய

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...