தமிழில் தேட.....

Wednesday, May 13, 2020

செவ்வரளி தோட்டத்தில - பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்



படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
தானானே ஏஏ ஏஏஏஏஏ
தானானா ஆஆஆஆ ஆஆஆஆ
தானானா ஆஆஆஆ

பெண்:
செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல

செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

*********************************

ஆண்:
கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
அன்னமே

பெண்:
வெக்கமது உங்களுக்கில்ல
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே

ஆண்:
செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு

*********************************


ஆண்:
ஆ ஆஆஆ ஆஆஆ

ஐலேசா ஐலேசா ஹோய் ஹா  ஹோய் ஹா
ஐலேசா ஐலேசா ஹோய் ஹா  ஹோய் ஹா

ஆடும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம்
மலருற செண்டாட்டம்
ஆடும் அலை ஓயாதம்மா
ஆசை அது தேயாதம்மா

*********************************

பெண்:
ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்லே ஒட்டுறவு தேவையில்லே
என்னய்யா

ஆண்:
என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே

பெண்:
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு (ஆண்: ஆ )
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

ஆண்:
அக்கம் பக்கம் யாருமில்லே
ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...