தமிழில் தேட.....

Sunday, May 3, 2020

ஏழை விளக்கு - எச்சில் இரவுகள் பாடல் வரிகள்



படம் : எச்சில் இரவுகள்
இசை : இளையராஜா

*********************************

ஆ ஆ ஆ ஆ
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ

ஏழை விளக்கு அது வானில்‌ வந்ததடி
கண்ணில்‌ சோகம்‌ தங்குதடி
கொஞ்சம்‌ மோகம்‌ இந்துதடி
எச்சில்‌ இரவு தூங்குதடி
பாலா பொழிஞ்ச நிலா சோகம்‌ சொட்டுதடி
இங்கு வாங்கி கொடுத்த மல்லி வாடி விட்டதடி
ஏழை விளக்கு அது வானில்‌ வந்ததடி

*********************************

தூரத்தில இருந்தாலும்‌
ஜோதி நிலா தெரிகிறதே
பூமியிலே இருந்தாலும்‌
ராணி முகம்‌ தெரியலையே
சொல்லி வச்சு வந்த நிலா
கொள்ளி வச்சு போகாதோ
கண்ணீர்‌ தெரிச்சு அந்த கறை அழியாதோ
கண்ணீர்‌ தெரிச்சு அந்த கறை அழியாதோ

அவள்‌ சிறகிழந்தாளோ இல்ல சிறையிருந்தாளோ
நடுச்சாமம் அகராம தேங்கி  நிக்குதடி
அழுதாலும்‌ முடியாதோ தொழுதாலும்‌ விடியாதோ
பாலா பொழிஞ்ச நிலா சோகம்‌ சொட்டுதடி
இங்கு வாங்கி கொடுத்த மல்லி வாடி  விட்டதடி

ஏழை விளக்கு அது வானில்‌ வந்ததடி
கண்ணில்‌ சோகம்‌ தங்குதடி

*********************************

பாவி மக கண்ணீரில்‌
பாயும்‌ மிதந்திருக்கும்‌
மிச்சமுள்ள கண்ணீரில்‌
மச்சமெல்லாம்‌ கரைஞ்சிருக்கும்
கை முளைச்ச ரோசாவே
கண்‌ முழிச்சு வாடாதே
நாடு சுடுகாடு இதில்‌ காதல்‌ எங்கிருக்கு
அட நாடு சுடுகாடு இதில்‌ காதல்‌ எங்கிருக்கு

இது விதையில்ல சாமி இது சதியுள்ள பூமி
நடபாத நிலவாகி  தீபம்‌ தந்தவளே
மனசெலல்லாம்‌ இருளாச்சோ
மயில்‌ தோகை சருகாச்சோ
பாலா பொழிஞ்ச நிலா சோகம்‌ சொட்டுதடி
இங்கு வாங்கி கொடுத்த மல்லி வாடி விட்டதடி

ஏழை விளக்கு அது வானில்‌ வந்ததடி
கண்ணில்‌ சோகம்‌ தங்குதடி
கொஞ்சம்‌ மோகம்‌ இந்துதடி
எச்சில்‌ இரவு தூங்குதடி
பாலா பொழிஞ்ச நிலா சோகம்‌ சொட்டுதடி
இங்கு வாங்கி கொடுத்த மல்லி வாடி விட்டதடி

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...