தமிழில் தேட.....

Sunday, May 3, 2020

கடற்கரையில்‌ இருப்போர்க்கு- எச்சில் இரவுகள் பாடல் வரிகள்



படம் : எச்சில் இரவுகள்
இசை : இளையராஜா

*********************************

ஆண் :
கடற்கரையில்‌ இருப்போர்க்கு அலையோச
காசில்லா எங்களுக்கு எலை ஓச

தினத்தோம்‌ தினத்தோம்‌ தினத்தோம்‌ தித்தோம் தித்தோம் ‌

நடு ரோடு அடி ஆத்தி நம்ம வீடு
தடையேது அட சாமி விளையாடு
இருந்தா குடிப்போம் இல்லேன்னா படுப்போம்‌
தினமும்‌ விருந்து தெருவில்‌ இருந்து

குழு:
ஹோய் நடு ரோடு அடி ஆத்தி நம்ம வீடு ஹேய்‌ ஹேய்‌
தடை ஏது அட சாமி விளையாடு ஹேய்‌ ஹேய்
இருந்தா குடிப்போம் இல்லேன்னா படுப்போம்‌
தினமும்‌ விருந்து தெருவில்‌ இருந்து
ஹேய்  நடு ரோடு அடி ஆத்தி நம்ம வீடு

*********************************

ஆண் :
குடும்பத்தில்‌ கல்யாண தேதி வெச்சா
அழைப்பு கொடுக்கட்டும்‌ இல்லாமல்‌ போகட்டும்‌
அங்கேயும்‌ நாங்க இருப்போம்‌

குழு:
குடும்பத்தில்‌ கல்யாண தேதி வெச்சா
அழைப்பு கொடுக்கட்டும்‌ இல்லாமல்‌ போகட்டும்‌
அங்கேயும்‌ நாங்க இருப்போம்‌

ஆண் :
சாமி எங்களை பாக்காம விட்டாலும்‌
கோயிலை நாங்கதான்‌ பாக்காம விட்டமா

குழு:
எல்லாரும்‌ அம்மாதான்‌ எங்கேயும்‌ எங்களுக்கு

ஆண் :
ஓட்டுரிமை இல்லாட்ம என்னடாப்பா
ரோட்டுரிமை கொடுத்தானே போதுமப்பா

குழு:
ஹோய் நடு ரோடு அடி ஆத்தி நம்ம வீடு ஹேய்‌ ஹேய்‌
தடை ஏது அட சாமி விளையாடு ஹேய்‌ ஹேய்
இருந்தா குடிப்போம் இல்லேன்னா படுப்போம்‌
தினமும்‌ விருந்து தெருவில்‌ இருந்து
ஹேய்  நடு ரோடு அடி ஆத்தி நம்ம வீடு

*********************************

ஆண் :
ஒழைக்கத்தான் எல்லோரும்‌ ஆசை வெச்சோம்‌
பொழப்பும் கிடைக்கல  பூவாவும்‌ வழியில்லே
மானத்தை தெருவில்‌ வச்சோம்‌

குழு:
ஒழைக்கத்தான் எல்லோரும்‌ ஆசை வெச்சோம்‌
பொழப்பும் கிடைக்கல  பூவாவும்‌ வழியில்லே
மானத்தை தெருவில்‌ வச்சோம்‌

ஆண் :
நாட்டிலே என்னதான்‌ ஆட்சிகள்‌ மாறட்டும்‌

குழு:
ரோட்டிலே எங்களோட காட்சிகள்‌ மாறாது
எப்போதும்‌ நாங்களே தப்பான தாளங்களே

ஆண் :
தமிழ்‌ எழுத்து புரிஞ்சதில்லை புரிஞ்சதில்லை
ஆனாலும்‌ தலையெழுத்தப்‌ புரிஞ்‌சருக்கோம்‌ ஹேய்‌

குழு:
நடு ரோடு அடி ஆத்தி நம்ம வீடு ஹேய்‌ ஹேய்‌
தடை ஏது அட சாமி விளையாடு ஹேய்‌ ஹேய்

ஆண் :
தினத்தோம்‌ தினத்தோம்‌ தினத்தோம்‌ தித்தோம் தித்தோம் ‌
தினத்தோம்‌ தினத்தோம்‌ தினத்தோம்‌ தித்தோம் தித்தோம் ‌

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...