தமிழில் தேட.....

Monday, May 11, 2020

ஆசை நெஞ்சில்- பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்



படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

ஆகாது பெண்ணின்‌ உள்ளம்‌
ஆழம்‌ காண யாரால்‌ ஆகும்‌
ஆகாது பெண்ணின்‌ உள்ளம்‌
ஆழம்‌ காண யாரால்‌ ஆகும்‌
ஆற்றங்கரை கனவு கண்ணில்‌
ஆராரோரோ ஆயிரம்தானோ

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

*********************************


நீ சூடும்‌ பூவும்‌ பொட்டும்‌
காதல்‌ செய்த பாவம்‌
நான்‌ பாடும்‌ பாடல்‌ கேட்டு
யாருக்கென்ன லாபம்‌

கண்ணால்‌ ஜாடை முன்னாலேயே
சொன்னால்‌ கூட போதாதோ
ஆஅஆ

நீ சூடும்‌ பூவும்‌ பொட்டும்‌
காதல்‌ செய்த பாவம்‌
நான்‌ பாடும்‌ பாடல்‌ கேட்டு
யாருக்கென்ன லாபம்‌
கண்ணால்‌ ஜாடை முன்னாலேயே
சொன்னால்‌ கூட போதாதோ

நீயாக தேடி வந்து
தீயாக நெஞ்சில்‌ நின்று
பொன்னா என்றா என்னை
சுட்டுப்‌ பார்த்தாய்‌
ஆஅஆ

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

*********************************

கல்யாண கோலம்‌ கண்டேன்‌
காலில்‌ மெட்டி தாளம்‌
நல்வாழ்த்து பாட வந்தேன்‌
கண்ணில்‌ என்ன ஈரம்‌

ஏதோ ஏழு ஜென்மம்‌ உண்டாம்‌
நாமும்‌ ஒன்று சேர்வோமே
ஆஆஆஆ

கல்யாண கோலம்‌ கண்டேன்‌
காலில்‌ மெட்டி தாளம்‌
நல்வாழ்த்து பாட வந்தேன்‌
கண்ணில்‌ என்ன ஈரம்‌

ஏதோ ஏழு ஜென்மம்‌ உண்டாம்‌
நாமும்‌ ஒன்று சேர்வோமே

நீ பார்த்த பார்வை நெஞ்சில்‌
பால்‌ வார்க்கும்போதும்‌ மிஞ்சும்‌
வாழ்நாள்‌ என்றும்‌
நீதான்‌ என்றே வாழ்வேன்‌ நான்‌

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

ஆகாது பெண்ணின்‌ உள்ளம்‌
ஆழம்‌ காண யாரால்‌ ஆகும்‌
ஆகாது பெண்ணின்‌ உள்ளம்‌
ஆழம்‌ காண யாரால்‌ ஆகும்‌
ஆற்றங்கரை கனவு கண்ணில்‌
ஆராரோரோ ஆயிரம்தானோ

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...