தமிழில் தேட.....

Saturday, May 9, 2020

காலை நேர காற்றே - பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்



படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்
காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

*********************************

ஆண்:
நடந்தால் காவேரி நீ
ஈஈஈஈ
நகைத்தால் ஸ்ரீதேவி தான்

பெண்:
மொழியே தேவாரமோ
ஓஓஓஓ
விழி மேல் பாமாலையோ

ஆண்:
கனவாய் நீயானால்
இமையால் நான் பூட்டுவேன்

பெண்:
மனமே நீயாள
மணித்தேர் நானோட்டுவேன்

ஆண்:
கன்னி தேரில் சாமரம் வீசும்
பின்னல் மீதும் பூவின வாசம்

பெண்:
பொதிகை தமிழில் கவிதை பொழியும்
பாரதி தோழனோ


ஆண்:  காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
பெண்: வாழ்த்திச் செல்லு
ஆண்:  மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

பெண்:
பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

ஆண்:  காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
பெண்: வாழ்த்திச் செல்லு
ஆண்: மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
பெண்: பார்த்துச் சொல்லு

*********************************

பெண்:
மடித்தேர் ராஜாங்கமே
ஏஏஏஏஏஏ
கிடைத்தால் மாமாங்கமே

ஆண்:
மலைத்தேன் மேலோங்கவே
ஏஏஏஏஏஏ
இளைத்தேன் நான் ஏங்கியே

பெண்:
கனி வாய் தேனாற்றில்
ஒரு நாள் நீராட்டுவாய்

ஆண்:
இதழாம் தீரத்தில்
மறுநாள் பாராட்டுவேன்

பெண்:
அந்தி வானில் குங்கும சேலை
தங்க மேக சங்கம மாலை

ஆண்:
நயன மலரின் சயன அறையில்
நாயன ஓசையோ

பெண்: காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
ஆண்: வாழ்த்திச் செல்லு
பெண்: மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

ஆண்:
பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

பெண்: காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
ஆண்: வாழ்த்திச் செல்லு
பெண்: மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
ஆண்: பார்த்துச் சொல்லு

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...