தமிழில் தேட.....

Thursday, May 7, 2020

வைகரையில் வைகைக்கரையில் - பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள்



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************

வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

*********************************

உன் நினைவே எனக்கோர் சுருதி
உன் கனவே எனக்கோர் கிருதி
உன் உணர்வில் மனமே உருகி
வாடுதம்மா மலர் போல் கருகி
பல பல ஜென்மம் நான் எடுப்பேன்
பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன்
ஆஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ

வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்


*********************************

ஆயிரம் ஆயிரம் ஆசைகளை
ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளை
கேள் என நெஞ்சிடம் கூற வந்தேன்
நினைவுகள் எங்கோ அலைகிறதே
கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே
ஆஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ

வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...