தமிழில் தேட.....

Showing posts with label பயணங்கள் முடிவதில்லை. Show all posts
Showing posts with label பயணங்கள் முடிவதில்லை. Show all posts

Friday, May 8, 2020

இளைய நிலா - பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள்



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

*********************************

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

*********************************

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
ஓடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது
யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

*********************************

ஏய் ஆத்தா - பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள் yeh aatha payanangal mudivadhillai lyrics tamil



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************

ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போரியா
அடி ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போரியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ள

ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போரியா

*********************************

ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம
அணைக்கத் துடிச்சிருக்கேன்
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன்

தவிச்ச மனசுக்குத்
தண்ணி தர வேண்டாமா
தளும்பும் நெனப்புக்கு
அள்ளிக்கிறேன் நீ வாம்மா
மாருல குளிருது சேத்தென்ன அணைச்சா
தீருமடி குளிரும் கட்டிப்பிடிச்சிக்க

ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போரியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ள

*********************************

நான் போறேன் முன்னால
நீ வாடி பின்னாலே
நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணால என்னாடி அம்மாலே
வாடுற வாட்டத்துக்கு

சிரிச்ச சிரிப்பில
சில்லரையும் செதருது
செவந்த மொகங்கண்டு
எம்மனசு பதறுது
பவள வாயில தெரியுற அழகப்
பாத்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது

ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
ஆ ஆஆ ஆஆ
நான் பார்த்தா பார்க்காமலே போரியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ள

ஏய் ஆத்தா ஆ ஆ ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போரியா

*********************************

ராக தீபம் ஏற்றும் நேரம் - பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள்



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************

ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஹா ஆஅ ஆ ஆஅ
ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ

ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
முதல் முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ

என் விழியோ கடல் ஆனதம்மா
என்னங்களோ அலை மோதுதம்மா
புது ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
முதல் முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ

*********************************

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல்
கவிதை அரங்கேருமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல்
கவிதை அரங்கேருமோ
தேவி உன் கோவில் வாசல் முன்னாலே
காவியம் தேனென பூமியில்

முதல் முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
முதல் முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ

*********************************

ஆனந்த கங்கை வெள்ளம்
பொங்கப் பொங்க
ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல

ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும்
அம்பிகைக்கே சொந்தம்
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க
கற்ற வித்தை என்றும் செழிக்க
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க
கற்ற வித்தை என்றும் செழிக்க
முத்து ரத்தினம் சிந்தும் நித்தினம்
அன்னை உன்னை வணங்கி நின்று

ராக தீபம் ஏற்றும்
நல்ல நேரமிது
புது வித ராக தீபம் ஏற்றும்
நல்ல நேரமிது
கான மழை இனி நான் பொழிவேன்
தேன் மழையில் இனி நீ நனைவாய்
புது ராக தீபம் ஏற்றும்
நல்ல நேரமிது புது வித
ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

*********************************

Thursday, May 7, 2020

வைகரையில் வைகைக்கரையில் - பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள்



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************

வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

*********************************

உன் நினைவே எனக்கோர் சுருதி
உன் கனவே எனக்கோர் கிருதி
உன் உணர்வில் மனமே உருகி
வாடுதம்மா மலர் போல் கருகி
பல பல ஜென்மம் நான் எடுப்பேன்
பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன்
ஆஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ

வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்


*********************************

ஆயிரம் ஆயிரம் ஆசைகளை
ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளை
கேள் என நெஞ்சிடம் கூற வந்தேன்
நினைவுகள் எங்கோ அலைகிறதே
கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே
ஆஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ

வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

*********************************

தோகை இளமயில் - பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள்



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************

ஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆ
ஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ
ஆ ஆஆஆஆ ஆ ஆ
ஆஆ ஆஆ ஆஆ

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள்
நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ

*********************************

கோலம் போடும் நாணங்கள்
காணாத ஜாலம்
இதழ்களிலே பௌர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள்
ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா
நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில்
சங்கீதம் உண்டாகும்
தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம்
நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

*********************************

பூமி எங்கும் பூந்தோட்டம்
நாம் காண வேண்டும்
புதுத் தென்றலோ
பூக்களில் வசிக்கும்,
ஆகாய மேகங்கள்
நீரூற்ற வேண்டும்
அந்த மழையில்
மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும்
கள்ளூறும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள்
நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

*********************************

மணி ஓசை கேட்டு எழுந்து - பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள்



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************

பெண்:
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்த கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ ம்ம்ம்
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

*********************************

ஆண்:
கண்ணன் பாடும் பாடல் கேட்க
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக்கண்ணன் ஆ.(இருமல் )
பேசக்கூடாதோ (இருமல் )

பெண்:
கண்ணன் பாடும் பாடல்
கேட்க ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக்கூடாதோ

ஆண்:
ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் மனம் வாடலாமோ
வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

*********************************

ஆண்:
பாதை மாறி போகும்போது..உ.. (இருமல்)
ஊரும் வந்தே சேராது(இருமல் )
தாளம் மாபோடும்போது ஆ..(இருமல்)
ராகம் தோன்றா..( இருமல் )

பெண்: பாதை மாறி போகும்போது ஊரும்வந்தே சேராது

ஆண்: தாளம் மாறி போடும்போது ராகம் தோன்றாது

பெண்: பாடும் புது வீணை இங்கே

ஆண்:
ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ தாளம் சேருமோ

பெண்: ம் .ம்...மணி ஓசை கேட்டு எழுந்து

ஆண்: நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

பெண்: திருத்தேரில் நானும் அமர்ந்து

ஆண்: ஒரு கோயில் சேர்ந்த பொழுது

பெண்:
அந்த கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ

ஆண்:
ம்.. மணி ஓசை கேட்டு எழுந்து (மூச்சு)
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

*********************************

Tuesday, April 23, 2019

சாலை ஓரம் சோலை ஒன்று - (பயணங்கள் முடிவதில்லை)



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************


பெண்: சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்துக்
கண்ணோ ரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்துக்
கண்ணோ ரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்

*********************************

ஆண்: பாவையிவள் பார்த்துவிட்டால்
பாலைவனம் ஊற்றெடுக்கும்

கண்ணிமைகள் தானசைந்தால்
நந்தவனக் காற்றடிக்கும்

பெண்: நீங்கள் என்னைப் பார்த்தால்
குளிரெடுக்கும் ம்ம்ம்
மனதுக்குள் ஏனோ
மழையடிக்கும்

ஆண்: ஓ பாரிஜாத வாசம்
நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம்
நேரம் பார்த்து வீசும்

பெண்: மொட்டுக் கதவை
பட்டு வண்டுகள்
தட்டுகின்றதே இப்போது
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்

ஆண்: கண்ணாளனைப் பார்த்துக்
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்துக்
கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்

*********************************

பெண்: கடற்கரை ஈரத்திலே
காலடிகள் நீ பதிக்க

பெண்: அலை வந்து அழித்ததினால்
கன்னி மனம்தான் துடிக்க

ஆண்: கடலுக்குக் கூட
ஈரமில்லையோ
நியாயங்களைக் கேட்க
யாருமில்லையோ

பெண்: சேர்த்து வைத்த தாகம்
கண்ணா என்று தீரும்
சேர்த்து வைத்த தாகம்
கண்ணா என்று தீரும்

ஆண்: பேசும் கிள்ளையே
ஈர முல்லையே
நேரமில்லையே இப்போது
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்

பெண்: கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து

இருவரும்: தா ர ரா த
தா ர ரா த ர ராஆ
த ரா ராஆஆஆ

*********************************