படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
*********************************
பெண்: சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்துக்
கண்ணோ ரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்துக்
கண்ணோ ரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்
*********************************
ஆண்: பாவையிவள் பார்த்துவிட்டால்
பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தானசைந்தால்
நந்தவனக் காற்றடிக்கும்
பெண்: நீங்கள் என்னைப் பார்த்தால்
குளிரெடுக்கும் ம்ம்ம்
மனதுக்குள் ஏனோ
மழையடிக்கும்
ஆண்: ஓ பாரிஜாத வாசம்
நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம்
நேரம் பார்த்து வீசும்
பெண்: மொட்டுக் கதவை
பட்டு வண்டுகள்
தட்டுகின்றதே இப்போது
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்
ஆண்: கண்ணாளனைப் பார்த்துக்
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்துக்
கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்
*********************************
பெண்: கடற்கரை ஈரத்திலே
காலடிகள் நீ பதிக்க
பெண்: அலை வந்து அழித்ததினால்
கன்னி மனம்தான் துடிக்க
ஆண்: கடலுக்குக் கூட
ஈரமில்லையோ
நியாயங்களைக் கேட்க
யாருமில்லையோ
பெண்: சேர்த்து வைத்த தாகம்
கண்ணா என்று தீரும்
சேர்த்து வைத்த தாகம்
கண்ணா என்று தீரும்
ஆண்: பேசும் கிள்ளையே
ஈர முல்லையே
நேரமில்லையே இப்போது
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்
பெண்: கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
இருவரும்: தா ர ரா த
தா ர ரா த ர ராஆ
த ரா ராஆஆஆ
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...