படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
வாழவைக்கும் காதலுக்கு ஜே
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே
பெண்:
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே
ஆண்:
வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே
பெண்:
வாழவைக்கும் காதலுக்கு ஜே
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே
*********************************
பெண்:
ஆஆ ரதார ரதார ரதார
நாணம் என்னை விட்டுச்சே
மோகம் என்னை தொட்டுச்சே
கையணைக்க கையணைக்க
ஆண்:
கன்னி விழி பட்டுச்சே
காளை மனம் கெட்டுச்சே
மெய்யணைக்க மெய்யணைக்க
பெண்:
கள்ளோடும் முள்ளோடும்
தள்ளாடும் செம்பூவை
நீயும் அள்ள அம்மம்மா
என்னென்ன ரசிச்சே
ஆண்:
முன்னாலும் பின்னாலும்
முத்தாட இந்நேரம்
மோகம் கொண்டு
அப்பப்பா தப்புக்கு தவிச்சே
பெண்:
பார்வை தனில் நாளும்
நீந்தும் பாவை ஒரு மீனாச்சே
ஆண்:
தேகம் தனை நாளும் மூட
ஆடை இந்த ஆளாச்சே
பெண்:
வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே
ஆண்:
வாழவைக்கும் காதலுக்கு ஜே
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே
பெண்:
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே
பெண்:
வாழவைக்கும் காதலுக்கு ஜே
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே
*********************************
ஆண்:
தேன் மழையும் கொட்டுச்சே
தேகம் எங்கும் பட்டுச்சே
வெட்கம் விட்டு பக்கம் நிற்க
பெண்:
பெண் மனது அஞ்சிச்சே
போதும் என்று கஞ்சிச்சே
வஞ்சி என்னை கொஞ்ச கொஞ்ச
ஆண்:
உன் மடி பொன் மடி
மன்னவன் கொண்டாடும் நேரம் என்ன
சொல்லடி சொல்லடி சிந்திச்சே
பெண்:
பொன்மகள் பூமகள் என்மனம்
எந்நாளும் தஞ்சம் என்று
உன்னிடம் உன்னிடம் வந்துச்சே
ஆண்:
வாடை என நானும் வந்தேன்
வாழை மடல் போலாச்சே
பெண்:
வாரி எனை நானும் தந்தேன்
வாலிபந்தான் மேலாச்சே
ஆண்:
வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே
பெண்:
வாழவைக்கும் காதலுக்கு ஜே (ஆண்: ம் ம் ம் )
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே (ஆண்: ம் ம் ம் )
ஆண்:
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே
பெண்:
வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே
ஆண்: வாழவைக்கும் காதலுக்கு ஜே
பெண்: வாலிபத்தின் பாடலுக்கும் ஜே
பெண்: வாழவைக்கும் காதலுக்கு ஜே (ஆண்: ம் ம் ம் )
ஆண்: வாலிபத்தின் பாடலுக்கும் ஜே
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...