படம்: நடிகன்
இசை: இளையராஜா
*********************************
ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே
பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே
ஆண் : நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா
பெண்: இது மோக மந்திரமா
எனை ஏய்க்கும் தந்திரமா
ஆண் : அடி மானே மானே ஆசை
தேனே வா என் விழிகளின் வழியே
பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே
ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே
*********************************
ஆண்: தென்றல் ஒரு புறம் மின்னல் ஒரு புறம்
பெண்ணில் தெரிகிறதே
பெண்: திங்கள் ஒருபுறம் வெய்யில் ஒருபுறம்
கண்ணில் வருகிறதே
ஆண் : அள்ளும் ஒருபுறம் துள்ளும் ஒருபுறம்
இன்பம் வழிகிறதே
பெண்: அச்சம் ஒருபுறம் வெட்கம் ஒருபுறம்
நெஞ்சில் எழுகிறதே
ஆண்: ஆடை கட்டி ஆட வந்த வானவில்லே
ஆசையென்னும் மாலை கட்டி வாடி இங்கே
பெண்: காதல் என்னும்
நாடகத்தின் மேடை இங்கே
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே
ஆண்: இனி நானும் நீயும்
நாளும் கூட
அடி மானே மானே ஆசை தேனே வா
என் விழிகளின் வழியே
பெண்: பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே
ஆண்: தேவமல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே
பெண்: இது மோக மந்திரமா
எனை ஏய்க்கும் தந்திரமா
ஆண் : நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா
பெண்: என் மானின் மானின் ஆசை
தேனே வா என் விழிகளின் வழியே
ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே
பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே
*********************************
பெண்: அள்ளிக்கொடு கதை
சொல்லிக்கொடு என அன்னக்கிளி வருமே
ஆண் : அந்திக்கலை அது
சிந்தைக்கினியது ஆசைப்படி வருமே
பெண்: எட்டிப்பிடி எனை
கட்டிப்பிடி என
அஞ்சும் இடைவருமே
ஆண்: எங்கும் பிடி சுகம்
பொங்கும் வடியென
கொஞ்சும் கிளி வருமே
பெண்: காமன் அம்பை
கண்ணிரண்டில் பூட்டுகின்றாய்
காதல் என்னும் தீயை நெஞ்சில்
மூட்டுகின்றாய்
ஆண் : வாடை தன்னில்
நீயும் என்னை வாட்டுகின்றாய்
வாலிபத்தின் ஆசைதன்னை மீட்டுகின்றாய்
பெண்: என் ராஜா சூடும் ரோஜா பூவோ
என் மானின் மானின் ஆசை தேனே
வா என் விழிகளின் வழியே
ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே
பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே
ஆண்: நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா
பெண்: இது மோக மந்திரமா
எனை ஏய்க்கும் தந்திரமா
ஆண் : அடி மானே மானே ஆசை
தேனே வா என் விழிகளின் வழியே
பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே
ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...