தமிழில் தேட.....

Tuesday, April 2, 2019

மடை திறந்து - (நிழல்கள்)

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா

*********************************

மடை திறந்து தாவும் நதி அலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹே
தனனன்னனா நான்ன நனனா
தனனன்னனா நான்ன நனனா


ஹேய் ஹப் பபப்பபப்பா
பபப்பபப்பா பாபப்ப பாபப்பா
பபப்பபப்பா பாபப்ப பாபப்பா
பபப்பபப்பா பாபப்ப பாபப்பா

*********************************

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே
நானும் இறைவனே.. ஹேய்
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின்
நாட்டியம் அமைப்பேன் நான்

மடை திறந்து தாவும் நதி அலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹே ...

*********************************

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்களம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்களம்
இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள்
ராஜ்ஜியம் எனக்கே தான்

மடை திறந்து தாவும் நதி அலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹே

லலலல்லல்லா லால்லலலலா
லலலல்லல்லா லால்லலலலா


*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...