படம்: அர்ச்சனை பூக்கள்
இசை: இளையராஜா
*********************************
ஆண் :
லால்லல் லா லால்லல் லா
காவிரியே காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
காவிரியே
பெண் :
காவிரியே
காதலன் போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலி நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
காவிரியே
ஆண் :
காவிரியே
காதலி போல் விளையாடுறியே
*********************************
பெண் :
பொன்னை அள்ளித் தூவுதே
மஞ்சள் நிற மேகம்
என்னை அள்ளிப் போகுதே
கொஞ்சுகிற ராகம்
என்னமோ
ஆண் : ம்ம்
பெண் : பண்ணுதே
ஆண் : ம்ம்
பெண் : இந்த மன வேகம்
ஆண் :
அள்ளிக்கொள்ள வந்தேனம்மா
அன்பை அள்ளித் தந்தேனம்மா
இனிமேல் யாவும் நீதானம்மா
பெண் :
ஆசை வச்சேன் ஆசை வச்சேன்
அம்மன் கோவிலு பூஜை வச்சேன்
ஒன்ன பார்த்தொரு பாசம் வச்சேன்
உன் உள்ளம் பார்த்ததும் நேசம் வச்சேன்
காலம் நேரம் ஒண்ணாச் சேர்ந்தது
ஆண் :
காவிரியே காவிரியே
காதலி போல் விளையாடுறியே
*********************************
ஆண் :
காதலுக்கு மார்கழி
ரொம்ப நல்ல மாசம்
ஹோய் கண்டபடி வீசுதே
மல்லியப்பூ வாசம்
கையிலே
பெண் : ஹா
ஆண் : கையிலே
பெண் : ம்ம்
ஆண் : கன்னிப்பொண்ணு பேசும்
பெண் :
புதுசா பாடம் சொல்லி
மெதுவாய் என்னை அள்ளி
சுகமா தாங்க வாழ் நாளெல்லாம்
ஆண் :
காவிரியே காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
பெண் :
லால்லல் லா லால்லல் லா
லாலா லல லா லால்லல் லா
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...