தமிழில் தேட.....

Showing posts with label பூந்தென்றலே நீ பாடி வா. Show all posts
Showing posts with label பூந்தென்றலே நீ பாடி வா. Show all posts

Wednesday, September 11, 2019

பூந்தென்றலே நீ பாடி வா - மனசுக்குள் மத்தாப்பு பாடல் வரிகள்



படம்: மனசுக்குள் மத்தாப்பு
இசை: S A  ராஜ்குமார்

******************************************

ஆண்:
ம்ம்ம்
ம்ம்ம்
நன்ன நான நந நநநந நநநந

இரு: நநநந நநநந
நநநந நநநந நநநந

ஆண்:
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா

பெண்:
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்

ஆண்:
கண்ணில் வரும் பெண்ணின்
முகம் பிருந்தாவனம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா

******************************************

ஆண்:
தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின் சூர்யோதயம்

பெண்:
தாங்காமல் பெண் உனை
தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்

ஆண்:
ஹே ப்ரம்ம தேவா தர வேண்டும்
நூறாண்டுகள்

பெண்:
நான் காதல் செய்ய
போதாது நூறாண்டுகள்

ஆண்:
கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்

பெண்:
கண்ணா என் மன்னா நீ
கோடி பேரில் மானுடன்

ஆண்:
பூந்தென்றலே நீ பாடி வா

பெண்:
பொன் மேடையில் பூச்சூட வா

பெண்:
ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹ ஹ ஹ ம்

******************************************

பெண்:
ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது
நீ பாடினால் பூவானது தேனானது

ஆண்:
நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது
வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது

பெண்:
பூலோக சொர்க்கம் கண்
முன்னே நான் காண்கிறேன்
ஆண்:
நீ தேவ வர்க்கம் உன்
நெஞ்சில் நான் வாழ்கிறேன்

பெண்:
காலங்கள் மாறினும்
தேகங்கள் போயினும்

ஆண்:
காதல் அழியாது
அது நாளும் வாழும் உன் வசம்

பெண்:
பூந்தென்றலே நீ பாடி வா

ஆண்:
பொன் மேடையில் பூச்சூட வா

பெண்:
கண்ணன் மனம் மங்கை தொழும்
தேவாலயம்

ஆண்:
கண்ணில் வரும் பெண்ணின் முகம்
பிருந்தாவனம்

பெண்:
பூந்தென்றலே நீ பாடி வா

ஆண்:
பொன் மேடையில் பூச்சூட வா

******************************************