தமிழில் தேட.....

Monday, April 27, 2020

ஓ பாப்பா லாலி- இதயத்தை திருடாதே பாடல் வரிகள்



படம் : இதயத்தை திருடாதே
இசை : இளையராஜா

*********************************

ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன் கேளடி

ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன் கேளடி

ஓ பாப்பா லாலி

*********************************

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி

தலை சாய்த்திட மடிபாய் மேல்
திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத
இளந்தாமரை முகமோ

இதைக் காப்பது என்றும் பார்ப்பது
இந்த தாய் மனமே

ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன் கேளடி
ஓ பாப்பா லாலி

*********************************

ஓ மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ

ஓ குயிலியே பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ

எழும் சந்தமும் இனிதாக
அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலைபாய
வரும் ஆசைகள் கனவோ

எந்த ஆசையும் நிறைவேறிட
நல்ல நாள் வருமே

ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன் கேளடி
ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன்

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...