தமிழில் தேட.....

Showing posts with label இதயத்தை திருடாதே. Show all posts
Showing posts with label இதயத்தை திருடாதே. Show all posts

Thursday, April 30, 2020

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்- இதயத்தை திருடாதே பாடல் வரிகள்


படம் : இதயத்தை திருடாதே
இசை : இளையராஜா

*********************************

குழு : ஆஆஆ ஆஆஆ

பெண் :
ஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ
காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்
கன்னிப் பூவும் நான்தானோ
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும்
சின்னப்பொண்ணும் நான்தானோ
நிழலாய் தான் ஓட
நானோ உன் கூட

பெண்:  என் ஊர் என்ன
குழு:  என்ன
பெண்: என் பேர் என்ன
குழு: என்ன
பெண்: நான் தான் யாரு
குழு : யாரு
பெண் : என் வழி யாரு
குழு : ஹேஹேஹே

பெண் : ஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ

*********************************

பெண் :
எந்நாளும் ஆசைகள் என்னை விடுமோ
நீ தழுவ நான் வரவோ
இந்நாளில் சூடாகும் என் மனமும்
கண் விழிமேல் நீ இல்லையோ

மோகினி பிசாசு என் இனம்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
மோகினி பிசாசு என் இனம்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
பருவத் துணை மயக்கி உன்னை
பாய் போட நீ வாடா

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்
கன்னிப் பூவும் நான்தானோ

*********************************

குழு :
பூத பிரேத பிசாசு
வேதாள பேயின் ஜம்பம்
ஜடம்பாம்பாம்

ஆண் :
காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்
கன்னிப் பூவும் நீதானோ
கிட்டவந்து கொஞ்ச சொல்லும்
சின்னப் பொண்ணும் நீதானோ
நிழலாய்த் தான் ஓட
நானோ உன் கூட

ஏன் சபலம் வருதா
நீயும் காட்டுக்கு புதிதா
நீ மயங்கும பொழுதா
நானும் புடிச்சுக்க தோதா

குழு :
ஹா ஹா ஹா ஹா ஆஹா
ஓஓ ஓஓ ஓ

ஆண் :
ராத்திரி நேர பூஜைகள் எல்லாம்
இப்போ இனிமேல்தான்
அருகினில் வருவேன்டி
ஆசையில் தொடுவேன்டி

குண்டலி ஏற சொக்குற பூஜை
இப்போ இனிமேல்தான்
சட்டுன்னு போடத்தான்
சுள்ளுன்னு ஏறாதா

நில்லடி மானே போக்கிரி பெண்ணே
பெண் பேய் உன்னைப் பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே
அதுதான் அடங்காதா
நில்லடி மானே போக்கிரி பெண்ணே
பெண் பேய் உன்னைப் பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே
அதுதான் அடங்காதா

அடி ஆத்தி பட் பட் பட் பட்
விலகாதே ஜட் பட் ஜட் பட்
போ பெண்ணே மயக்கங்கள்
எதுக்கு நான் கூட

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்
கன்னிப்பூவும் நீதானோ (ஆஹா)
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும்
சின்னப் பொண்ணும் நீதானோ
நிழலாய்த்தான் ஓட ட ட ட
நானோ உன் கூட

ஏன் சபலம் வருதா
நீயும் பாட்டுக்கு புதிதா
நீ மயங்கும் பொழுதா
நானும் புடிச்சுக்க தோதா

குழு :
ஆஆஆஆஆ
ஓஓ ஓஹோ

ஆண் :
காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்
கன்னிப்பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும்
சின்னப் பொண்ணும் நீதானோ

*********************************

Wednesday, April 29, 2020

ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தை திருடாதே பாடல் வரிகள்

படம் : இதயத்தை திருடாதே
இசை : இளையராஜா

*********************************

ஆண்:
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ம்ம்ம் ம்ம்ம்

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது


பெண்:
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது

ஆண்:
தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வு பொய்யடி

*********************************

குழு :
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ

பெண்:
அன்பு கொண்ட கண்களும்
ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ
பெண்மை தாங்குமோ

ஆண்:
ராஜ மங்கை கண்களே
என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர்
பாவி அல்லவோ

பெண்:
எதனாலும் ஒரு நாளும்
மறையாது பிரேமையும்

ஆண்:
எரித்தாலும் மரித்தாலும்
விலகாத பாசமோ

பெண்:
கன்னி மானும் உன்னுடன்
கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே
குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ
ஆ நீ வா வா


ஆண்:
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா

பெண்:
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா

*********************************

குழு :
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பெண்:
காளிதாசன் ஏடுகள்
கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது
பாவம் அல்லவே

ஆண்:
ஷாஜகானின் காதலி
தாஜ்மஹல் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான்
சாவும் வந்தது

பெண்:
இறந்தாலே இறவாது
விளைகின்ற பிரேமையே

ஆண்:
அடி நீயே பலியாக
வருகின்ற பெண்மையே

பெண்:
விழியில் பூக்கும் நேசமாய்
புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே
இங்கு வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன் கூட வா வா

ஆண்:
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா

பெண்:
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா

ஆண்:
ஏக்கம் என்ன பைங்கிளி
என்னை வந்து சேரடி

பெண்:
நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

*********************************

காவியம் பாடவா தென்றலே- இதயத்தை திருடாதே பாடல் வரிகள்



படம் : இதயத்தை திருடாதே
இசை : இளையராஜா

*********************************

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே

*********************************

விளைந்ததோர் வசந்தமே
புதுச்சுடர் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் என்பதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ

*********************************

புலர்ந்ததோ பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசைத்ததும்
சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே

*********************************

Monday, April 27, 2020

ஓ பாப்பா லாலி- இதயத்தை திருடாதே பாடல் வரிகள்



படம் : இதயத்தை திருடாதே
இசை : இளையராஜா

*********************************

ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன் கேளடி

ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன் கேளடி

ஓ பாப்பா லாலி

*********************************

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி

தலை சாய்த்திட மடிபாய் மேல்
திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத
இளந்தாமரை முகமோ

இதைக் காப்பது என்றும் பார்ப்பது
இந்த தாய் மனமே

ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன் கேளடி
ஓ பாப்பா லாலி

*********************************

ஓ மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ

ஓ குயிலியே பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ

எழும் சந்தமும் இனிதாக
அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலைபாய
வரும் ஆசைகள் கனவோ

எந்த ஆசையும் நிறைவேறிட
நல்ல நாள் வருமே

ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன் கேளடி
ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன்

*********************************

Saturday, November 9, 2019

ஓம் நமஹா - இதயத்தை திருடாதே பாடல் வரிகள்



படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ஓம் நமஹா உருகும் உயிருக்கு
ஓம் நமஹா உயிரின் உணர்வுக்கு ஓம்

பெண்:
ஓம் நமஹா உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா உறவின் உதவிக்கு ஓம்

ஆண்:
வான் வழங்கும் அமுத கலசம்
வாய்வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ

பெண்:
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

******************************************

ஆண்: மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா

பெண்: நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா

ஆண்: ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா

பெண்: ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா

ஆண்:
நூலாடை விலகி விலகி நீரோடை
பெருகி வடியும் வேளை

பெண்:
முத்தங்கள் வைத்ததும் மூன்று
உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்

******************************************

பெண்:
செவ்விதழ் சேரும்போது
ஜீவன்கள் சிலிர்த்தது

ஆண்:
ஒவ்வொரு ஆசையாக
உள்ளத்தில் துளிர்த்தது

பெண்: மெல்லிய மேனியும் சில்லென ஆனது

ஆண்: வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது

பெண்:
ஏடென்று இடையும் இருக்க
நூலொன்று இதயம் எழுதாதோ

ஆண்:
இளமையின் இலக்கணம் எடுத்து
சொல்லிய இளைய கன்னிக்கு ஓம்

பெண்:
ஓம் நமஹா உருகும் உயிருக்கு
ஓம் நமஹா உயிரின் உணர்வுக்கு ஓம்

ஆண்:
ஓம் நமஹா உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா உறவின் உதவிக்கு ஓம்

பெண்:
வான் வழங்கும் அமுத கலசம்
வாய்வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ

ஆண்:
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ