தமிழில் தேட.....

Saturday, November 9, 2019

காத்திருந்தேன் தனியே - ராசா மகன் பாடல் வரிகள்



படம்: ராசா மகன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
காத்திருந்தேன் தனியே
எதிர் பார்த்திருந்தேன் உனையே
பூத்திருந்தேன் விழியே
வண்ணப்பூ முடித்தக் கிளியே
பகல் இரவாய் பல பொழுதாய்
உன்னை மீண்டும் கூடும் நினைவாய்

பெண்:
இங்கு காத்திருந்தேன் தனியே
எதிர் பார்த்திருந்தேன் உனையே

******************************************

ஆண்:
பாலும் தேனும் பழச்சாறும்
இதழ் மேலும் கீழும் என்று கூறும்

பெண்:
இதில் பாதி பாதி ரெண்டு பேரும்
பங்கு போட வேண்டும் இந்த நேரம்

ஆண்:
நீ கொடுத்தால் மெதுவாய் மெதுவாய்
நான் எடுப்பேன் துணையே

பெண்:
நீ எடுத்தால் மயக்கம் பிறக்க
நான் மறப்பேன் எனையே

ஆண்:
காலம் காலமாய்
காதின் ஓரமாய்
காதல் வேதம் படிப்பேன்

பெண்:
இங்கு காத்திருந்தேன் தனியே
எதிர் பார்த்திருந்தேன் உனையே
பகல் இரவாய் பல பொழுதாய்
உன்னை மீண்டும் கூடும் நினைவாய்

ஆண்:
இங்கு காத்திருந்தேன் தனியே
எதிர் பார்த்திருந்தேன் உனையே

******************************************

பெண்:
நீ இல்லாத என்னை பார்த்து
மெல்ல ஆடை நீக்க வரும் காற்று

ஆண்:
இன்று நீயும் நானும் பின்னும் போது
தென்றல் நீந்தி போக இடம் ஏது

பெண்:
பூ முடித்தால் முதல் நாள் இரவில்
பாய் விரிப்பேன் உயிரே

ஆண்:
பாய் விரித்தால் மடி மேல் எடுத்து
நோய் தணிப்பேன் தளிரே

பெண்:
ஓடை நான் என ஓடம் நீ என
ஆடும் நேரம் அதுவோ

ஆண்:
இங்கு காத்திருந்தேன் தனியே
எதிர் பார்த்திருந்தேன் உனையே

பெண்: பகல் இரவாய்

ஆண்: பல பொழுதாய்

பெண்: உன்னை மீண்டும் கூடும் நினைவாய்

ஆண்: இங்கு காத்திருந்தேன் தனியே

பெண்: எதிர் பார்த்திருந்தேன் உனையே

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...