தமிழில் தேட.....

Wednesday, November 27, 2019

ஜோடி நதிகள் - அன்பே ஓடி வா பாடல் வரிகள்



படம்: அன்பே ஓடி வா
இசை: இளையராஜா

******************************************

ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆஆஆஆஆஆ
லாலாலா லல்லாலலா
லாலாலாலல்லலால ல்லா
லலலலல லலலலல

ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின

ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின
இரு கரை முழுதும்
இனி மலர் வளரும்
இரு கரை முழுதும்
இனி மலர் வளரும்
ஆஹா
ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின

******************************************

அன்பே என் நெஞ்சம் மேலும் தாளாது
நீந்தும் என் கண்ணில் கண்ணீர் கூடாது
ராகம் மாறலாம் நீ தான் பல்லவி
காயம் நேரலாம் நீ தான் பௌர்ணமி
இது காதல் இல்லை
இது காதல் இல்லை என்பதா
நினைவுகள் மறையுமா கனவுகள் கரையுமா
வானும் மண்ணும் இன்றோடு ஒன்றாக
ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின
இரு கரை முழுதும்
இனி மலர் வளரும்

ஆஹா ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின

******************************************

ஆகாயம் வீணை மீண்டும் பாடாது
காதல் பூமாலை தோளை தேடாது
நீயே பூ வனம் உன் மௌனம் சம்மதம்
உன் நெஞ்சம் என் வசம்
என் வாழ்வே உன் வசம்
இது நேசம் இல்லை
இது நேசம் இல்லை பாசமே
இருவரும் பழகினோம் இடையிலே விலகினோம்
காலம் மீண்டும் கையோடு கை சேர்க்க
ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின
இரு கரை முழுதும்
இனி மலர் வளரும்
இரு கரை முழுதும்
இனி மலர் வளரும்
ஆஹா ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின

******************************************

Monday, November 11, 2019

தனிமையிலே ஒரு ராகம் - சட்டம் ஒரு இருட்டறை பாடல் வரிகள்



படம்: சட்டம் ஒரு இருட்டறை
இசை: சங்கர் கணேஷ்

******************************************

ஆண்:
தனிமையிலே
ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது

பெண்:
தனிமையிலே ஏ
ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது

******************************************

ஆண்:
ஹோ நெஞ்சமே
உன்னிடம் இன்று தான் மாற்றமே
ஹோ நெஞ்சமே
உன்னிடம் இன்று தான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட
இளம் பெண்ணாலும் பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள்
ஆறு போல ஓடவேண்டும்

பெண்:
தனிமையிலே
ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்

ஆண்:
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது

******************************************


பெண்: ஆ
ஆண்: ஆ ஆஅ  ஆஅ
பெண்:  ஆ ஆ
ஆண்: அ அ அ அ அ
பெண்: ஆ ஆஆஆஆ ஆ ஆஆஆஆ ஆ ஆஆஆஆ ஆஅஆஅ

பெண்:
என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் உள்ள பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள்
ஊர வேண்டும் சேரவேண்டும்

ஆண்:
தனிமையிலே ஹா  ஆ ஆஆஆஆ
ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்

பெண்:
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது

******************************************

ஆண்:
ஹே தென்றலே
என் மனம் வானிலே போகுதே
ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே

பெண்:
எண்ணாத இன்பங்கள் யாவும்
இனி எந்நாளும் உன்னோடு வாழும்

ஆண்:
பனி நீராட்டும் இந்நேரம்
பாடவேண்டும் கூட வேண்டும்

பெண்:
தனிமையிலே ஆ ஆ
ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்

ஆண்:
இனிமையின் கவிதைகள் பிறந்தது (பெண்: ஆ ஆ )
இளமையின் நினைவுகள் பறந்தது (பெண்: ஆ ஆ )

இருவரும்:
ல ல ல  ல ல ல  ல ல ல
ல ல ல  ல ல ல  ல ல ல
ல ல ல  ல ல ல  ல ல ல

******************************************


Saturday, November 9, 2019

ஓம் நமஹா - இதயத்தை திருடாதே பாடல் வரிகள்



படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ஓம் நமஹா உருகும் உயிருக்கு
ஓம் நமஹா உயிரின் உணர்வுக்கு ஓம்

பெண்:
ஓம் நமஹா உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா உறவின் உதவிக்கு ஓம்

ஆண்:
வான் வழங்கும் அமுத கலசம்
வாய்வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ

பெண்:
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

******************************************

ஆண்: மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா

பெண்: நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா

ஆண்: ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா

பெண்: ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா

ஆண்:
நூலாடை விலகி விலகி நீரோடை
பெருகி வடியும் வேளை

பெண்:
முத்தங்கள் வைத்ததும் மூன்று
உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்

******************************************

பெண்:
செவ்விதழ் சேரும்போது
ஜீவன்கள் சிலிர்த்தது

ஆண்:
ஒவ்வொரு ஆசையாக
உள்ளத்தில் துளிர்த்தது

பெண்: மெல்லிய மேனியும் சில்லென ஆனது

ஆண்: வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது

பெண்:
ஏடென்று இடையும் இருக்க
நூலொன்று இதயம் எழுதாதோ

ஆண்:
இளமையின் இலக்கணம் எடுத்து
சொல்லிய இளைய கன்னிக்கு ஓம்

பெண்:
ஓம் நமஹா உருகும் உயிருக்கு
ஓம் நமஹா உயிரின் உணர்வுக்கு ஓம்

ஆண்:
ஓம் நமஹா உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா உறவின் உதவிக்கு ஓம்

பெண்:
வான் வழங்கும் அமுத கலசம்
வாய்வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ

ஆண்:
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன் பாடல் வரிகள்



படம்: பூந்தோட்டக் காவல்காரன்
இசை: இளையராஜா

******************************************

குழு:
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் #ம் ம் ம் ம்

பெண்:
பாராமல் பார்த்த நெஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்

ஆண்:
இரு பார்வை
அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்

பெண்:
பாராமல் பார்த்த நெஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்

******************************************

ஆண்:
நித்திரை கெட்டது கண்ணே
என் சித்திர பெண்ணே

பெண்:
முத்திரை கண்டது முன்னே
நீ தொட்டதன் பின்னே

ஆண்:
நித்திரை கெட்டது கண்ணே
என் சித்திர பெண்ணே

பெண்:
முத்திரை கண்டது முன்னே
நீ தொட்டதன் பின்னே

ஆண்:
பூபாளம் கேட்டேனே
பொன் மானை பார்த்தேனே

பெண்:
பேசாமல் நின்றேனே
பெண் என்று ஆனேனே

ஆண்:
கட்டளை இட்டதும்
பட்டதும் தொட்டதும் கற்பனை அல்ல
இள வெற்றிலை என்றொரு
வெற்றிலை கண்டது அற்புதம் அல்ல

பெண்:
நீ தொட்டதும் சுட்டது
பட்டுடை விட்டது நானும் சொல்ல

ஆண்:
பாராமல் பார்த்த நெஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்

பெண்:
இரு பார்வை
அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்

ஆண்:
பாராமல் பார்த்த நெஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்

******************************************

குழு:
உ உ உ உஉஉ உஉஉ
உ உ உ உஉஉஉ  உஉஉ
உ உ உ உஉஉ உஉஉ
உ உ உ உஉஉ உஉஉ

பெண்:
மெல்லிய மல்லிகை பூவே
புது மெல்லிசை பாடு

ஆண்:
வல்லியின் மெல்லிடை மேலே
புது சங்கதி போடு

பெண்:
மெல்லிய மல்லிகை பூவே
புது மெல்லிசை பாடு

ஆண்:
வல்லியின் மெல்லிடை மேலே
புது சங்கதி போடு

பெண்:
பூந்தேகம் தாங்காது
என் தேவன் ஏந்தாது

ஆண்:
ஆறாது தீராது
நீ வந்து சேராது

பெண்:
பெண் இவள் மேனியில்
கண் இமை மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம்
உன்னுடன் கூடிடும் என் மனம் இன்று

ஆண்:
புவி மண்ணிலும் விண்ணிலும்
பொன்கவி பாடிடும் தேகம் ஒன்று

பெண்:
பாராமல் பார்த்த நெஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்

ஆண்:
இரு பார்வை
அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்

பெண்:
பாராமல் பார்த்த நெஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்

குழு:
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்
ம்ம்ம்ம்  ம்ம்ம்ம்  ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்

******************************************

என் வீட்டு ஜன்னல் எட்டி - ராமன் அப்துல்லா பாடல் வரிகள்



படம்: ராமன் அப்துல்லா
இசை: இளையராஜா

******************************************

பெண்:
என் வீட்டு ஜன்னல் எட்டி
ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு
நீ தாக்குற
கண்ணாலே பேசாதே
கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து
பூங்காத்தா வீசு
மருதாணி அரைச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன்
ராசா ராசா
உருகாம உருகி நின்னேன்
உன் அழகை பருகி நின்னேன்
லேசா லேசா

ஆண்:
என் வீட்டு ஜன்னல் எட்டி
ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு
நீ தாக்குற
கண்ணாலே பேசாதே
கையாலே பேசு
கையோடு கை சேர்த்து
பூங்காத்தா வீசு
மருதாணி அரைச்சு வச்ச
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச
ராணி ராணி
உருகாம உருகி நின்னேன்
உன் அழகை பருக வந்தேன்
வா நீ வா நீ

******************************************

ஆண்:
பாட்டு ஒரு பாட்டு
புது பாட்டு இசை போட்டு
முந்தானை தந்தானம் பாட

பெண்:
கேட்டு அதை கேட்டு
கிரங்காமல் சுருதி மீட்டு
நெஞ்சோரம் சிங்காரம் தேட

ஆண்:
வயலோரம் வரப்போரம்
தினம் காத்திருந்து வாட

பெண்:
இரு தோளில் ஒரு மாலை
இது ராத்திரியில் சூட

ஆண்:
நான் உறவாய்
வரவா வரவா

பெண்:
என் வீட்டு ஜன்னல் எட்டி
ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு
நீ தாக்குற

ஆண்:
கண்ணாலே பேசாதே
கையாலே பேசு
கையோடு கை சேர்த்து
பூங்காத்தா வீசு

பெண்:
மருதாணி அரைச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன்
ராசா ராசா

ஆண்:
உருகாம உருகி நின்னேன்
உன் அழகை பருக வந்தேன்
வா நீ வா நீ

பெண்:
என் வீட்டு ஜன்னல் எட்டி
ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு
நீ தாக்குற

******************************************

பெண்:
பாடு நடை போடு
அழகோடு உறவாடு
ஆகாயம் கிட்டே வராது

ஆண்:
மூடு திரை போடு
முத்தாடி விளையாடு
மூச்சோடும் என்னை விடாது

பெண்:
மறவேனே வருவேனே
சிறு பூ பறித்திட தானே

ஆண்:
வரம் நானே பெறுவேனே
நீ மன்மத மலை தேனே

பெண்:
நான் உறவாய்
வரவா வரவா

ஆண்:
என் வீட்டு ஜன்னல் எட்டி
ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு
நீ தாக்குற

பெண்:
கண்ணாலே பேசாதே
கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து
பூங்காத்தா வீசு

ஆண்:
மருதாணி அரைச்சு வச்ச
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச
ராணி ராணி

பெண்:
உருகாம உருகி நின்னேன்
உன் அழகை பருகி நின்னேன்
ராசா ராசா

ஆண்:
என் வீட்டு ஜன்னல் எட்டி
ஏன் பாக்குற

பெண்:
இள நெஞ்ச தொட்டு தொட்டு
நீ தாக்குற

******************************************

காத்திருந்தேன் தனியே - ராசா மகன் பாடல் வரிகள்



படம்: ராசா மகன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
காத்திருந்தேன் தனியே
எதிர் பார்த்திருந்தேன் உனையே
பூத்திருந்தேன் விழியே
வண்ணப்பூ முடித்தக் கிளியே
பகல் இரவாய் பல பொழுதாய்
உன்னை மீண்டும் கூடும் நினைவாய்

பெண்:
இங்கு காத்திருந்தேன் தனியே
எதிர் பார்த்திருந்தேன் உனையே

******************************************

ஆண்:
பாலும் தேனும் பழச்சாறும்
இதழ் மேலும் கீழும் என்று கூறும்

பெண்:
இதில் பாதி பாதி ரெண்டு பேரும்
பங்கு போட வேண்டும் இந்த நேரம்

ஆண்:
நீ கொடுத்தால் மெதுவாய் மெதுவாய்
நான் எடுப்பேன் துணையே

பெண்:
நீ எடுத்தால் மயக்கம் பிறக்க
நான் மறப்பேன் எனையே

ஆண்:
காலம் காலமாய்
காதின் ஓரமாய்
காதல் வேதம் படிப்பேன்

பெண்:
இங்கு காத்திருந்தேன் தனியே
எதிர் பார்த்திருந்தேன் உனையே
பகல் இரவாய் பல பொழுதாய்
உன்னை மீண்டும் கூடும் நினைவாய்

ஆண்:
இங்கு காத்திருந்தேன் தனியே
எதிர் பார்த்திருந்தேன் உனையே

******************************************

பெண்:
நீ இல்லாத என்னை பார்த்து
மெல்ல ஆடை நீக்க வரும் காற்று

ஆண்:
இன்று நீயும் நானும் பின்னும் போது
தென்றல் நீந்தி போக இடம் ஏது

பெண்:
பூ முடித்தால் முதல் நாள் இரவில்
பாய் விரிப்பேன் உயிரே

ஆண்:
பாய் விரித்தால் மடி மேல் எடுத்து
நோய் தணிப்பேன் தளிரே

பெண்:
ஓடை நான் என ஓடம் நீ என
ஆடும் நேரம் அதுவோ

ஆண்:
இங்கு காத்திருந்தேன் தனியே
எதிர் பார்த்திருந்தேன் உனையே

பெண்: பகல் இரவாய்

ஆண்: பல பொழுதாய்

பெண்: உன்னை மீண்டும் கூடும் நினைவாய்

ஆண்: இங்கு காத்திருந்தேன் தனியே

பெண்: எதிர் பார்த்திருந்தேன் உனையே

******************************************

Thursday, November 7, 2019

சின்னஞ்சிறு வயதில் - மீண்டும் கோகிலா பாடல் வரிகள்



படம்: மீண்டும் கோகிலா
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ம்ம்….ம்ம்...ம்ம்..ம்ம்
ம்ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்.

பெண்:
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

******************************************

பெண்:
மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்

சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்...
ஊமையைப் போலிருந்தேன்

ம்..ம்…ம்…

ஆண்:
ஆ….ஆ…...

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

ஆண்: சபாஷ்
ஆண்: பலே

******************************************

ஆண்:
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.

பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்

காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே
மோதும் விரகத்திலே
செல்லம்மா ......ம்ம்...

பெண்:
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

******************************************

பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள் பாடல் வரிகள்



படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா

******************************************

குழு:
ஆ ஆஆஆ
ஆ ஆ ஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ

ஆண் :
பூந்தளிர் ஆட (குழு: ஆஆஆஆ ஆஆஆஆ)
பொன்மலர் சூட (குழு: ஆஆஆஆ ஆஆஆஆ)
பூந்தளிர் ஆட
பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
பூந்தளிர் ஆட (குழு: ஆஆஆஆ ஆஆஆஆ)
பொன்மலர் சூட (குழு: ஆஆஆஆ ஆஆஆஆ)

******************************************

குழு: ல ல லா லா லா

பெண் : காதலை ஏற்றும் காலையின் காற்றும்

ஆண் : ம் ம்

பெண் :
நீரை தொட்டு பாடும் பாட்டும்
காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்

ஆண் : ம் ம்

பெண் :
வாடை பட்டு வாடும்
நெஞ்சில் எண்ணம் சுட்டதே

ஆண் :
கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே

பெண் :
தேடிடுதே பெண் காற்றின் ராகம்
பூந்தளிர் ஆட (குழு: ஆஆஆஆ ஆஆஆஆ)
பொன்மலர் சூட (குழு: ஆஆஆஆ ஆஆஆஆ)

******************************************

குழு:
ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்
ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : பூமலர் தூவும் பூ மரம் நாளும்

பெண் : ம் ம்

ஆண் :
போதை கொண்டு பூமி
தன்னை பூஜை செய்யுதே

பெண் : ஆ ஆ

ஆண் : பூ விரலாலும் பொன் இதழாலும்

பெண் : ம் ம்

ஆண் :
பூவை எண்ணம் காதல்
என்னும் இன்பம் செய்யுதே

பெண் :
பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே

ஆண் :
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
பூந்தளிர் ஆட (குழு: ஆஆஆஆ ஆஆஆஆ)
பொன்மலர் சூட (குழு: ஆஆஆஆ ஆஆஆஆ)

பெண் :
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்

ஆண் : இனி நாளும் சுப காலங்கள்

பெண் : பாடும் புது ராகங்கள்

ஆண் : இனி நாளும் சுபகாலங்கள்

******************************************

Sunday, November 3, 2019

உன்னைத் தொட்ட தென்றல் இன்று - தலை வாசல் பாடல் வரிகள்



படம்: தலை வாசல்
இசை: பாலபாரதி

******************************************

ஆண்:
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

பெண்:
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா

ஆண்:
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

******************************************

ஆண்:
தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பைக் கையில் தந்தாயே

பெண்:
உறங்கும் போதும் உந்தன் பேரைச்
சொல்லிப் பார்க்கிறேன்
உன்னைக் கண்டு பேசும் போதோ
உச்சி வேர்க்கிறேன்

ஆண்:
இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
(சிரிப்பு) உன்னைக் கேட்கிறேன்

பெண்:
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி

ஆண்:
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

******************************************

பெண்:
உன்னை எண்ணி என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்

ஆண்:
பார்க்க வந்த சேதி மட்டும்
சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும்
சொல்ல வில்லையே

பெண்:
நீ பார்வையில் காதலன்
பழக்கத்தில் கோவலன்
சொல்ல வில்லையே
(ஆண்: சிரிப்பு)

ஆண்:
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

பெண்:
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா

ஆண்:
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு
ம்ஹூம் (சிரிப்பு)
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன
(பெண்: சிரிப்பு)

******************************************

Saturday, November 2, 2019

ஒரு பட்டாம்பூச்சி - காதலுக்கு மரியாதை பாடல் வரிகள்



படம்: காதலுக்கு மரியாதை
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்

ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண்:
ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி
ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி
ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை
அடி என்னிடத்திலே
அட காதல் இது தானா

பெண் குழு:
பூச்சூட பூ வேணுமா
பூ இங்கே நீ தானம்மா
அடி கல்யாண ஊர்க்கோலமா
இனி எப்போதும் கார்க்காலமா

பெண்:
ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி
ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

******************************************

ஆண்:
ஏனோ மனது உன்னை கண்ட பொழுது
காற்றில் ஒரு மேகமென ஆச்சு

பெண்:
ஏனோ எனக்கு காதல் வந்த பிறகு
கண்ணாமூச்சி ஆடும் கதை ஆச்சு

ஆண்:
உன்னை அழைத்தவன் நானே நானே
தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன்

பெண்:
கூண்டு கிளி இங்கு நானே நானே
விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்

ஆண்:
உன் சேலை நூலாகவா
நான் உன் கூந்தல் பூவாகவா
அடி நான் இன்று நீ ஆகவா

பெண்:
ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி
ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

பெண் குழு: ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்

ஆண்:
பூவான என் நெஞ்சம் போராட
தூங்காத கண்ணோடு நீராட

பெண்:
உறவான நிலவொன்று சதிராட
கடிதங்கள் வாராமல் உயிர் வாட
அஞ்சலகம் எங்கு என்று
தேடுகின்றேன் நான்

பெண் குழு:
பூஞ்சோலை நீ தானம்மா
ஒரு பூ சிந்த பிடிவாதமா
மௌனங்கள் மொழியாகுமா

******************************************

பெண்:
காதல் மனசும்
தத்தளிக்கும் வயசும்
எப்பொழுதும் ஜன்னல் எட்டி பார்க்கும்

ஆண்:
ராத்திரி பொழுதும்
பௌர்ணமி நிலவும்
என் மனதை சுட்டு விட்டு போகும்

பெண்:
தனிமைகள் என்னை தொடுமே தொடுமே
பனித்துளி என்னை சுடுமே சுடுமே

ஆண்:
தாகம் கொண்ட தங்க குடமே குடமே
அள்ளித்தர கங்கை வருமே வருமே

பெண்:
மேகங்கள் தேனூற்றுமே
புது மொட்டுக்கள் பூவாகுமே
ஒரு பூமாலை தோள் சேருமே

ஆண்:
ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி
ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

பெண்:
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அது என்னிடத்திலே
அட காதல் இதுதானா

பெண் குழு:
பூச்சூட பூ வேணுமா
பூ இங்கே நீ தானம்மா
அடி கல்யாண ஊர்க்கோலமா
இனி எப்போதும் கார்க்காலமா

பெண்:
ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி
ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

ஆண்:
ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி
ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

******************************************

காதலா காதலா - அவ்வை ஷண்முகி பாடல் வரிகள்



படம்: அவ்வை ஷண்முகி
இசை: தேவா

******************************************

பெண்:
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

ஆண்:
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

******************************************

பெண்:
நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு
என் வேதனை சொல்லும்

குழு: ஓஹோ

ஆண்:
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொல்லும்

குழு: ஓஹோ

பெண்:
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி
இந்த ஈரம் என்று மாறுமோ
ஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓ

குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

ஆண்:
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்

******************************************

ஆண்:
ஓயாத தாபம் உண்டான நேரம்
நோயானதே நெஞ்சம்

குழு: ஓஹோ

பெண்:
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம்

குழு: ஓஹோ

ஆண்:
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டு போகுமோ
ஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓ

குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

பெண்:
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

ஆண்:
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

******************************************